அவர்களுள் செழியன் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நபர் வன்னிக்குள் ஆழ ஊடுருவும் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்.தற்போது கோடீஸ்வர வாழ்க்கை வாழ்த்துவரும் குறித்த நபர் யாழ்.நகரில் மீட்டர் வட்டிக்கு விடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.காங்கேசன்துறை வீதியில் பெட்டிக்கடை ஒன்றில் பதுங்கியுள்ள இவர் புனர்வாழ்வளிக்கப்படாது இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரால் விடுவிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் சுமார் 80 இலட்ச பெறுமதியில் கடை ஒன்றினையும் புதிதாக கொள்வனவு செய்துள்ளார்.
இவ்வாறான நபரொருவரை இராணுவ புலனாய்வு பிரிவே தற்போரு சரவணபவனுடன் தேர்தல் பணிகளிற்கென களமிறக்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஆதரவு வழங்குவது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்திற்குள் பாரிய குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, “தமிழரின் கனவு நனவாக வீட்டுக்கு வாக்களிப்போம்” யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் வேண்டுகோள் எனத் தெரிவித்து உதயன் பத்திரிகை இன்றைய தினம் பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.
இரட்ணம் எனப்படும் சரவணபவன் ஆதரவு விரிவுரையாளர் ஒருவரே குறித்த அறிக்கையினை தனித்து விடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருப்பதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருவர் தமிழரசுக்கடசி ஆதரவாளர்கள் இருவரே யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் என்ற பெயரில் அறிக்கைவிடுத்ததாக தெரியவந்திருக்கிறது.
இந்த நிலையில் குறித்த அறிக்கை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் குறித்த அறிக்கைக்கு பல்கலைக்கழக சமூகத்துக்கும் தொடர்பில்லை என்றும் அறிக்கைவிடுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்திருப்பதாக தெரியவந்திருக்கிறது.