இந்தநிலையில் விசாரணைகளின்போது எந்தவொரு வெளிநாட்டு சட்டத்தரணிகளையும் நீதிமன்ற வாதங்களுக்கு இலங்கை அனுமதிக்காது என்று ஜனாதிபதியின் உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய சர்வதேச நீதிமன்றம் ஒன்றை ஏற்றுக்கொள்வதற்காக அரசியலமைப்பில்; வழிசெய்யப்படாமல், இந்த விடயத்தை முன்னெடுப்பது அரசியல் ரீதியாக கடினமானது என்று ஜனாதிபதியின் உதவியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நியூயோர்க் டைம்ஸ_க்கு கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொறிமுறை உள்ளக பொறிமுறையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மதத்தலைவர்கள், இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் கவனமாக ஆராய்ந்த பின்னரே ஐக்கிய நாடுகளின் பரிந்துரைப்படியான நீதிமன்றத்தை அமைக்கப்படும் என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையிலேயே போர்க்குற்றத்தை விசாரிக்கும் வகையில் இலங்கை தற்போது அமைப்புக்களை கொண்டிருக்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் தெரிவித்திருந்தமை இந்த இடத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை சர்வதேசத்திடம் இருந்து நாடு தனிமைப்படுத்தப்படும்போதே தாம் ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்துள்ள சிறிசேன, சர்வதேசத்தை வெல்லவேண்டிய சவால் தம்முன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.