போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதனால், பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அன்டன் கேஸின் போர் இரகசியங்கள் பற்றிய ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவகார செயலகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
படையினரின் போர்க் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அன்டன் கேஸின் இரகசிய அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இரகசிய ஆவணத்தில் இறுதிக் கட்ட போரின் போது உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 6, 432 என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், புலம்பெயர் தமிழர்கள், இறுதிக் கட்ட போரின் போது 40, 000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக பிரச்சாரம் செய்கின்றனர் என குறித்த கொழும்பின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பில் அரசாங்கத் தரப்பில் இதுவரையில் எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை.