சர்வதேச விசாரணையை கூட்டாக வலியுறுத்துவோம்

வன்னி யுத்தத்தைத் தொடர்ந்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என நாம் வலி யுறுத்தியிருந்தால், இன்று தமிழ் மக்களின் நிலைமை வேறாக இருந்திருக்கும்.
என்ன செய்வது எழுதாக்குறைக்கு அழு தால் தீருமோ என்பதுபோல் எங்கள் தமிழ் அரசியல் தலைமையை இலங்கை ஆட்சி யாளர்கள் வாலாயப்படுத்தி தம் வசமாக்கிக் கொண்டனர்.

இதனால் சர்வதேச விசாரணை என்பதை நம் அரசியல் தலைமை வலியுறுத்தத் தவறியது.
இலங்கை அரசாங்கம் ஏதோவொரு அரசி யல் தீர்வைத் தரும். அதனை நாம் பெற்றுக் கொண்டால் போதும் என்ற நிலைப்பாடே நம் அரசியல் தலைமையிடம் இருந்தது.
தமிழ் மக்கள் நம்பி வாக்களிக்க, அவர் களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத் தில் ஆசனத்தைப் பிடித்த நம்மவர்கள் நமக் குத் துரோகம் செய்வார்கள் என்று எவரும் நினைத்திருக்கவில்லை.

பரவாயில்லை நம் அரசியல் தலைமை இலங்கை அரசுக்குச் சார்பாகச் செயற்படு கிறது. சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடந்து முடிந்து விட்டது என்று பச்சைப் பொய் பேசுகிறது என்பதைக்கூட, உணரமுடியாத மக்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள் எனும் போது அதனை அவர்களின் அறியாமை என்றே தமிழ் அரசியல் தலைமை கருதியது.

ஆனால் உண்மையில் எம் மக்களின் தன்மை அதுவல்ல. எங்கள் அரசியல் தலை வர்கள் தேர்தல் காலத்தில் வாக்குறுதி தந்துள் ளார்கள். அவர்கள் எங்களுக்கு கெடுதி செய்யமாட்டார்கள். அவர்கள்தான் என்ன செய்ய முடியும்; அவர்கள் இயன்றவரை நமக் காகக் கதைக்கிறார்கள் என்ற நம்பிக்கை யைத் தவிர எம் மக்களிடம் வேறு எந்தச் சந்தே கமும் இருக்கவில்லை என்பதே உண்மை.

தமிழ் அரசியல் தலைமையை பரிபூரண மாக நம்பிய தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் தலைமை செய்த பச்சைத் துரோகத்தை யார் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டான். இது சத்தியம்.

பிள்ளையை இழந்து; குடும்பத்தைப் பறி கொடுத்து; பெற்றோரை இழந்து பரிதவிக்கும் ஒரு இனத்தின் விடியலுக்காகப் பாடுபட வேண்டி யவர்கள் குற்றம் புரிந்தவர்களைக் காப்பாற்ற நினைத்தமை கொடுமையிலும் கொடுமை.

அதேநேரம் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாண்ட உலக நாட்டுப் பிரதிநிதிகளும் ஐ.நா பிரதிநிதிகளும் இலங்கை யில் தமிழின அழிப்பு நடந்துள்ளது - போர்க் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது என்றே தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
குறிப்பாக நவநீதம்பிள்ளை அம்மையார் மற்றும் அல் ஹுசைன் போன்றவர்கள் அன்று முதல் இன்றுவரை சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நம் தமிழ் அரசியல் தலைமை இல ங்கை அரசாங்கத்துக்காகக் குரல் கொடுத் தது என்றால் இதைவிட்ட அநியாயம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
என்ன செய்வது நடந்தது நடந்துவிட்டது. இனிமேலாவது சர்வதேச விசாரணையை ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒன்றாகச் சேர் ந்து ஒற்றுமையாகக் கேட்போம். 
அது ஒன்றுதான் எங்களுக்கான உரிமையை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தரும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila