இலங்கை ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் மூன்றாண்டுகள் கடந்துள்ள நிலையினில் மஹிந்த யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
உச்சகட்ட சோதனை கெடுபிடிகள் மத்தியில் விசேட அதிரடிப்படையின் அதிகளவு பிரசன்னத்தின் மத்தியில் இப்பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் பீரிஸ் உள்ளிட்ட சிறீலங்கா பொதுஜன முன்னனியின் பிரமுகர்கள் பலரும் யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தனர்.
இதனிடையே ஜனாதிபதி மஹிந்த என விழித்து அமைக்கப்பட்டிருந்த பேனர்கள் அனைத்து தரப்பினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.