ஈழத்தமிழன் வெல்வது உறுதி – பரமபுத்திரன்.

அத்திப்பழம் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு” என்று தமிழில் ஒரு சொற்தொடர் உண்டு. பழம்தான் என்றாலும் ஒரு பயனும் இல்லை என்பதாக இருக்கலாம் அல்லது உள்ளே அசிங்கம் காத்திருக்கும் என்றும் இருக்கலாம். இன்று தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல, 

சிறீலங்கா முழுவதுமே அதிகாரம் ஒன்றை கைப்பற்ற அரங்கேறும் நட வடிக்கைகள் மிகவும் வெறுக்க க்கூடிய அல்லது மனிதப்பண்புக்கு அப்பாற்பட்ட வசைபாடல்களும், கேலிகளுமாக உள்ளது. யாருமே தங்களைப்பற்றி எண்ணாது பிறரை தூற்றி அல்லது ஒத்தூதி அரசியல் நடாத்தும் இழிநிலைக்கு வந்து விட்டார்கள். 

இதில் இறந்தவர்களைக்கூட விடவில்லை. தேவைப்படும் போதெல்லாம் அவ ர்களையும் தோண்டியெடுத்து வசைபாடி அல்லது ஒத்தூதி இந்த வரிசையில் சேர்த்துக்கொள்கின்றனர். அதிலும் சிலர் எந்த மட்டத்துக்கும் செல்ல தயார் நிலையில் இருக்கின்றனர். 

தனித்து பெயர் குறித்து எந்த அரசியல்வாதியையும் சொல்லமுடியவில்லை. யாபேரும் “ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்” என்று ஆளுக்காள் போட்டி போட்டு செயல்படுகின்றனர். அரசியல் நேர்மையை தொலைத்து, தங்களுக்கு தாங்களே விசுவாசமற்று இயங்குகின்றனர். 

உண்மையில் இந்த பண்பற்ற செயல்பாடு. ஒருசில அரசியல் வங்குரோத்து நிலையில் இருந்த தலைவர்களிடமும், எப்படியாவது தங்களை முன்னிலை ப்படுத்த வேண்டுமென எண்ணிய அரசியல்வாதிகளிடமும் முன்னர் இருந்த இந்த நிலை இன்று எல்லோரையும் தம்வசமாக்கி விட்டது.

இவ்வியல்பு இந்தியர்களிடம் அதிலும் குறிப்பாக தமிழர்களிடம் அதிகம் காண ப்பட்டது. ஆரம்பத்தில் தமிழக அரசியல் பிரசார மேடைகளில் பிறரை கேலி செய்ய, அல்லது கேவலமாக பேச சிலர் இருப்பார்கள்.

அந்த நிலை வளர்ந்து இன்றைய நகைச்சுவை நடிகர்கள் என்று சொல்லப்படும் வடிவேலு, சிங்கமுத்து போன்றோர்கள் திரைப்படங்களில் சிரிப்பிற்கு வருவது போல அரசியல் பிரசார மேடைகளிலும் மற்றைய போட்டியாளர்களை கேலி செய்வதையே தொழிலாக கொண்டு மேடைகளில் முழங்கினர்.

இப்போது இந்த நோய்நிலை சிறிலங்காவிலும் வந்துவிட்டது. ஏன் இப்படி இவர்கள் மாறிவிட்டார்கள் என்று முதலில் பார்ப்போம்.
தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்

“ மிடுக்கான சரக்கு இருக்க விலைப்படும்”

எனவே சரக்கு சரியில்லை என்றால் விளம்பரம்தான் வெற்றியை தீர்மா னிக்கும். இன்று அந்த விளம்பரங்களும் தங்கள் சரக்கின் சிறப்புகளை தவிர்த்து, அடுத்தவன் சரக்கின் குறைகளை கூறுவதை மட்டும் இலக்காக கொண்டு கள மிறங்குகின்றது. 

தமிழர்கள் முசுலீம்களின் அரசியலும் அப்படித்தான் அமைகின்றது. இங்கு முஸ்லீம்களை கூறக்காரணம் தமிழர்களும், தாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லீம்கள் என்று சொல்பவர்களையும் சிங்களம் ஒன்றாகத்தான் பார்க்கி றது. 

ஆனால் முசுலீம் தலைவர்கள் ஏதோ தமிழர்கள்தான் தங்கள் எதிரிகள் என்று நிறுவதில் வெற்றி காண்கிறார்களே தவிர முசுலீம்களின் எதிர்காலம் அவர்க ளுக்கு அவசியமில்லை. இதற்கும் மேலாக ஒருவரை ஒருவர் தூற்றும் அல்லது வசைபாடும் அரசியல் வருகின்றது என்றால், அதன் கருத்து அரசியல் செய்பவர்களிடம் எந்த ஆரோக்கியமான கொள்கையோ அல்லது திட்டமோ இல்லை அல்லது இதுவரை எந்த வெற்றிகளும் இவர்களால் சாதிக்கப்பட வில்லை என்பதே. 

 உண்மையில் அரசியல் செய்வதற்கு மூலதனமாக பயன்படுத்த வேண்டியது முக்கியமான இரு செய்திகள். ஒன்று இவர்கள் இதுவரை மக்களுக்காக சாதி த்த செயற்பாட்டுப்பட்டியல். இரண்டாவது இனி என்ன செய்யப்போகின்றோம் என்ற திட்டமிட்ட பட்டியல். இந்த இரண்டையும் முன்வைத்து நாங்கள் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் முன்வைத்தவை எவை?, 

அதில் நிறைவேற்றப்பட்டவை எவை?, இன்னும் நிறைவேற்றப்பட வேண்டி யவை எவை?, அவற்றை எம்மால் நிறைவேற்ற முடியாமைக்கான காரண ங்கள் என்ன?, மீதமுள்ள அவற்றை நிறைவேற்ற என்ன வழிமுறைகளை பின்பற்றபோகின்றோம்? என்று இவற்றைத்தானே முன்வைக்க வேண்டும். அடுத்ததாக எமது எதிர்கால திட்டங்கள் என்ன? அவற்றை முன்னெடுக்க நாம் செய்ய உள்ளது என்ன?. 

அதைவிடுத்து அடுத்தவர்களை குறை சொல்வதாலும், எடுத்ததற்கு எல்லாம் தமிழரின் விடுதலை பெறவே போராடுகின்றோம் என்பதும், நீங்கள் வாக்க ளித்தால் நாங்கள் விடுதலை பெற்று தருவோம் என்பதும் சுத்தமான ஏமாற்று த்தனம். தமிழர்களின் உளவியலை பயன்படுத்தி உங்கள் எண்ணங்களை வெற்றி கொள்ளும் துரோகத்தனம். 

தமிழ் மக்களை பொறுத்தவரை எப்போதும் தமிழ் உறுப்பினர்களுக்கே வாக்களிப்பர். அந்த நம்பிக்கையே இந்த துரோகம் அரங்கேற உதவுகின்றது. ஆனால் தமிழர்கள் தங்கள் வாக்குகளை குறித்த கட்சிகளுக்கே வழங்க கார ணம், கட்சிமீது வைத்திருக்கும் நம்பிக்கை அல்ல, அவர்களுக்கு வேறுதெரிவு எதுவும் கிடைக்காமையும், தங்களை சிங்களத்துக்கு விற்க விரும்பாமையும் மட்டும்தான். 

இதுதான் தமிழ் கட்சிகளின் ஒரேமூலதனம். தொடர்ந்து மக்களை ஏமாற்ற கிடைக்கும் வாய்ப்பு. சுலபமாக சொன்னால் நாம் ஒரு கடையில் உணவு உண்ணr; சென்றால் அங்கு எமக்கு பிடித்த உணவை உண்ணலாம் இல்லை யேல் அங்கிருக்கும் ஏதாவது உணவை உண்டு பசியை போக்கலாம். 

இதுதான் தமிழரின் நிலை விரும்புவது அல்ல, இருப்பதில் ஒன்றை தெரிவது. இதில் ஒரு சிறு செய்தியை சொல்லிவிட்டு தொடரவிரும்புகின்றேன். அது ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் நடுக்காலம். அப்போதும் நான் வன்னி யில் கிளிநொச்சியில் வாழ்ந்தேன். 

அங்கே எனக்கு ஒரு நண்பர். எதுக்கெடுத்தாலும் நண்பனைத்தான் சொல்கி றாய். உனக்கு என்று சொந்தமாக எதுவும் இல்லையா? என்று கேட்பீர்கள். அப்ப டியல்ல, ஒவ்வொரு மனிதனும் பல்வேறு மக்களின் எண்ணங்களின், கொள்கைகளின், பயிற்சிகளின் கலவையாகவே இருப்பான். அவற்றிலிருந்து தனித்துவமாக தன்னை உருவாக்குவான். 

என்னைப்பொறுத்தவரை நண்பர் ஒருவர் சொன்னதை என்னுடையது என்று சொல்ல விரும்பவில்லை. அதேவேளை இப்போது குறித்த நண்பர்களின் பெய ர்களை கூறவும் நான் விரும்பவில்லை. ஈழத்தில் அனைத்து தமிழ் ஈழ விடு தலை அமைப்புகளும் இயங்கிய காலம் அது. பொதுமக்கள், வியாபாரிகள், அரச ஊழியர்கள் என்று ஆள்வேறுபாடு இன்றி நாம் பயணம் செய்யும் வாகன ங்களை அவர்கள் வாங்குவார்கள். 

பின்பு தருவார்கள். தராமலும் விடுவார்கள். அதுவேறு தனிக்கதை. இந்த வேளைகளில் அவர் எனக்கு சொல்வார் “என்னடாப்பா தமிழ் ஈழம் பிடிக்கி றதுக்கு வாகனத்தை பறிக்கிறாங்கள், முல்லைத்தீவு றோட்டாலை போய், மூண்டாம் வாய்க்காலுக்கை பூருராங்கள், ஒருவேளை அதுக்கை தான் தமி ழீழம் கிடக்கோ தெரியேல்லை, என்ன நடக்குதெண்டு தெரியவே இல்லை.” என்பார். 

ஆகவே இன்றைய தமிழ் பிரசாரங்களும் அதுபோல அமையக்கூடாது. தமி ழர்களிடையே மோதல்களை உருவாக்கி வெற்றி காண்பதில் சிங்கள அரசி யல்வாதிகள் மிகவும் கெட்டிக்காரர்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தை ந்தில் திரு. எஸ். யே. வி. செல்வநாயகம், அன்றைய பிரதமர் திருமதி. சிறி மாவோ பண்டாரநாயக்க அவர்களுடன் சவாலில் இறங்கி, பதவியை துறந்து, தனது செல்வாக்கினை அல்லது தமிழரின் ஒற்றுமையை காட்டுவதற்கு காங்கேசன்துறைதேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்றார். 

காங்கேசன்துறை என்பது சாதாரண தொகுதி அல்ல. அது தமிழர்கள் முழுதாக வாழும் ஒரு பகுதி. செல்வநாயகம் அவர்கள் ஏகமனதாகவே தெரிவு செய்ய ப்பட முடியும். ஆனால் சிங்கள அரசும், அதனுடன் இணைந்த பொதுவுடமை வாதிகளும் ஒரு தமிழரை களமிறக்கியது. 

அவரும் ஒரு சமவுடமைவாதி. அவரிடம் ஒருமுறை ஒரு வினா வினவ ப்பட்டது. அதே கேள்வியும் பதிலும் அல்ல, ஆனால் அதே கருத்து, “ நீங்கள் இரசிய சமவுடமையை பின்பற்றுபவரா, அல்லது சீன பொதுவுடமையை பின்பற்றுபவரா” என்று. நான் தூய பொதுவுடமைவாதி என்று சொல்கின்றார். ஆனால் செல்வநாயகம் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிட இல்லாத நிலையில் இந்த தூய பொதுவுடமைவாதியை எதிராக நிறுத்தினர். 

அவர் வெற்றிபெறமாட்டார் என்பது தெளிவாக தெரிந்தும், தமிழரின் ஒருமித்த வாக்குவங்கியை சிதறடிப்பதற்காகவும், அரசினை விரும்பும்மக்கள் உள்ளா ர்கள் என்றும் காட்டவே இதனை செய்தார்கள். அந்நாளில் பிரபலமாக இருந்த சிங்கள அமைச்சர்கள், சிங்களஅரசியல் தலைவர்கள் மற்றும் அனுரா பண்டார நாயக்க போன்றோர் காங்கேசன்துறைக்கு வந்து மேடைகளில் முழங்கினர். 

தமிழரசு கட்சியின் கூட்டங்களிலும்பார்க்க அதிக மக்கள் அந்தக் கூட்டங்க ளிற்கு வருவார்கள். இதன்பொருள் அந்தக்கட்சிகளை தாங்கள் ஆதரிப்பது அல்ல, கொழும்பிலிருந்து வரும் சிங்கள தலைவர்களை பார்த்தலே நோக்கம். அது மட்டுமல்ல அன்றைய சில இளைஞர்கள் “கோழி மேச்சாலும் கோன்மே ந்தில உத்தியோகம் வேணும்” என்ற அடிப்படையில் தொழில் பெறுவதற்காக, அரசுசார்ந்த அக்கட்சி மேடைகளில் நகைச்சுவை நாடகங்களையும் நிக ழ்த்துவார்கள். 

இதில் தமிழரசுக்கட்சி தொடர்பான தூற்றல்களும் வந்து போகும். அவ்வாறு போட்டிபோட்டவர் வேறு யாருமல்ல. பின்னாளில் தமிழர் ஐக்கிய முன்ன ணியுடன் இயங்கிய வீ.பீ என்று அழைக்கப்பட்ட திரு. வீ. பொன்னம்பலம் அவ ர்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் மிகவும் நல்ல மனிதர். 

அவர் பின்னாளில் தமிழ் கட்சிகளுடன் இணைந்துவிடக்காரணம் தேர்தல் தோல்வி அல்ல. அரசின் போலித்தனம் புரிந்தமையே என்று சொல்லமுடியும். அவர் அதனை பின்னாளில் சொல்லியுமிருந்தார். எனவே எங்கள் அரசியல் தலைவர்களின் சிந்தனைவேகம், மதிநுட்பம் என்னவென்று கண்டறிதல் மிக வும் கடினம் போல தெரியும். ஆனால் சிங்களவருக்கு அதை சுலபமாக கையா ளும் ஆற்றல் உண்டு. 

எங்கள் தலைவர்களின் பணத்தாசையும், புகழ் ஆசையும் எப்படியானது என்று சிங்களர்கள் நன்கு அறிவார்கள். தமிழரின் நலத்திலும் தங்கள் நலனிலேயே அதிக அக்கறையுள்ளவர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும். அந்தளவுக்கு பலவீனமான தலைவர்களை கொண்டதுதான் தமிழர் அணி. தூய தலைவர்கள் என்று தம்மை எண்ணுபவர்கள் அல்லது தூய தலைவர்கள் என்னை மன்னிக்கவும். 

அன்றும் தமிழ்மக்களின் வாக்குகளை பெற, அரசுசார்ந்த கட்சிகளால் வேலை வாய்ப்பு, தொகுதிக்கான வசதி வாய்ப்புகள் என்ற கொள்கைகள் சொல்ல ப்ப ட்டன. அதேவேளை, இலவசப் பொருட்களும் வழங்கப்பட்டன. அதிலும் அந்த நாட்களில் மிகவும் உணவுப்பஞ்சம் நிலவியது. குறிப்பாக ஆனையிறவு தாண்டி அரிசி, மா, சீனி என்பன கொண்டுவருதல் மிகவும் கடினம்.

திரு.வீ. பொன்னம்பலம் அவர்களுக்குக்கு ஊருக்கு ஊர் யாராவது ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு அரிசி,மாவு, சீனி இதனை விட மதுபானமும் வந்து சேரும். இந்த பஞ்சகாலத்தில் கூட இவற்றை விரு ம்பாது தங்கள் வாக்குகளை தமிழர்கள் என்று ஒரே கொள்கையில் நின்று தமி ழரசுக்கட்சிக்கு வழங்கியவர்கள் இந்த தமிழ் மக்கள்.

எனவே திரு செல்வநாயகம் அவர்கள் தமிழ் மக்களை கடவுள்தான் காக்க வேண்டுமெனச் சொன்னது தனித்து சிங்களவரிடமிருந்து மட்டுமல்ல. இனி வரும் தமிழ்தலைவர்களிடமும் இருந்துதான் என்று நினைக்கின்றேன். இதே போல இன்றும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் ரணில் என்ற மனிதர் கருணாவை பிரித்தார் என்கின்றார்கள்.

அப்படியென்றால் உங்கள் பலம் என்ன?. சுய சிந்தனையே கிடையாதா? கூப்பி ட்டால் உடன் பின் செல்வது தான் தமிழன் இயல்பா? சிந்தித்து பேசுங்கள். தமிழ் தலைவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். தமிழர்களை பல வீனப்படுத்தாதீர்கள்.

“ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன தவறு” இது என் வசனம் அல்ல. சிறுவயதில் நான் கேட்ட வசனம். இன்றும் உலவும் வச னம். இந்த வசனம் மேடைகளில் ஒலிப்பது மட்டுமன்றி, இந்த வசனம் எழுத ப்பட்ட முடிகள் மேடைக்கு பேசவரும் தலைவர்களுக்கு சூட்டப்படும். அவர்க ளும் வீரமாக முழங்குவார்கள்.

அது தமிழர்களால் தந்தை செல்வா என்றழைக்கப்பட்ட எஸ். ஜெ. வீ செல்வநாயகம் உட்பட அன்றைய மூத்த தலைவர்களும், இன்று பெரிய தலை வர்கள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பந்தன் அவர்கள் உட்பட சகலரும் முழங்கியகாலம். அந்த நாட்களில் திரு காசியானந்தனும் இவர்களுடன் மேடைப்பிரச்சரங்களில் ஈடுபட்டார்.

பின்பு தனது நிலையை மாற்றி விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். இந்த இடத்திலொரு முக்கிய செய்தியை சொல்லிவிட்டு நகர முற்படுகின்றேன். நான் வெளிநாட்டில் இருந்துதான் எழுதுகின்றேன். எனவே வெளிநாட்டில் இருந்து ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எமக்கு இனிக்கும் மகிழ்ச்சியுடன் கேட்போம்.

ஆனால் அதே ஒரு தமிழன் என்றால் நாட்டைவிட்டு ஓடின ஒருவன் என்று தரக்குறைவாய் மதிப்பிடுவார்களே தவிர ஏற்க விரும்புவதில்லை. பொதுவான தமிழ் மனநிலை இது. அதேவேளை பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் கீழ்த்தரமான சொற்களை நானும் பயன்படுத்துவேன். ஆனால் இரண்டு வலு வான காரணங்கள் என்னை தரம் குறைந்த வார்த்தைகளை பேசவோ, எழு தவோ விடுவதில்லை.

ஒன்று என்னுடன் இருந்த ஒரு நண்பர். அவர் யாரையும் கோபப்பட்டு பேசுவது குறைவு, அப்படி பேசினாலும் பண்பாகவே பேசுவார். தரக்குறைவான வார்த்தைகள் பேசமாட்டார். இரண்டாவது நான் அதிக காலம் விடுதலைப்புலி களின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்த படியால், அவர்கள் தமிழில் மிகவும் நேர்த்தியை எதிர்பார்ப்பார்கள், தரம் குறைந்த வார்த்தைகளை ஏற்கவே மாட்டார்கள்.

இனி தொடர்கின்றேன் உங்களுக்கு விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள். அன்று மக்கள்மீது தலைவர்கள் கொண்டிருந்த நல்ல நம்பிக்கைக்கும், பலத்த செல்வாக்கிற்கும் ஒரு சம்பவம் சொல்ல விரும்புகின்றேன். அது எழுபதுகளின் மத்திய காலம். ஒருநாள் தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்று நடந்தது. அந்த இடம் இளவாலை என்று நினைக்கின்றேன்.

தெறித்து பொறிகள் பறக்க பேசும் பேச்சாளர்கள் வருவதால் அவர்களின் உரைகளை கேட்க மக்கள் ஊரூருராக கூட்டங்களுக்கு செல்வது வழக்கம். நானும் அவ்வாறு செல்வேன். இந்தக்கூட்டங்களில் தொண்டமான், இராசதுரை உட்பட காசியானந்தன், மாவை சேனாதிராசா என்று பலர் வரு வார்கள். கூட்டம் நடக்கின்றது.

செல்லத்தம்பு என்ற பேச்சாளர் என்று நான் நினைக்கின்றேன், மேடையில் பேசுகின்றார். அன்றைய நாட்களில் ஒலிபெருக்கி பாவிக்கும் நேரம் மட்டு ப்படுத்தப்பட்டிருக்கும். அது பத்து மணி அல்லது பத்தரையாக இருக்க வேண்டும். சரியாக ஞாபகமில்லை. கூட்டம் முடிவுறும் நேரம் கண்டிப்பாக காவல்துறை வரும்.

அனுமதி நேரம் முடிந்ததும் ஒலிபெருக்கியாளர் தனது ஒலிபெருக்கியை நிறுத்தி விடுவார். இல்லையேல் காவல்துறையினர் அவருடைய ஒலி பெருக்கியை பறிமுதல் செய்து விடுவார்கள். ஒலிபெருக்கி நிறுத்தப்பட்டதும் அவர் சொன்னார் மக்களே எனக்கு அண்மையில் வாருங்கள் நான் பேசுவது உங்களுக்கு தெளிவாக கேட்கும் என்றார்.

மக்கள் அனைவரும் மேடையை சூழ்ந்து கொள்கின்றனர். அவர் தொடர்ந்து பேசுகின்றார். அன்றும் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நடக்கவில்லை என்று சொல்லமுடியாது. விடுதலை அமைப்புகள் இல்லை, ஆனாலும் சுடுபவர்கள் இருந்தார்கள். அதேபோல சிறிலங்காவின் காவல்துறையும் தவறானது என்று ஒரு சொல்லில் சொல்லிவிட முடியாது.

எவ்வளவு இனவெறி அல்லது மனிதநேயம் அற்றவர்கள் இருக்கிறார்களோ, அந்தளவுக்கு நல்ல அங்கு மனிதர்களும் இருந்தார்கள். அதிலும் தமிழர்க ளிலும் சிங்களவர்களுக்கு மனிதநேயம் அதிகம் என்பது ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று.

ஒரு சில பண்பாடற்ற சிங்கள உயர் அதிகாரிகள் மொத்த சிங்களரின் பெயரை யும் கெடுப்பார்கள். அதை ஒருபுறம் விட்டுவிட்டு செய்திக்கு வருவோம். இப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி கேட்டார். இன்னும் எவ்வளவு நேரம் உங்கள் கூட்டம் நடக்கும்.

அவர் சொன்னார் எமக்கு அரை மணிநேரம் தேவை. உடனே காவல் துறை பொறுப்பதிகாரி ஒலிபெருக்கி உரிமையாளருக்கு சொன்னார் அரைமணி நேரம் அவருக்கு ஒலிபெருக்கி வசதி வழங்குங்கள் அவர் ஒலிபெருக்கியில் உரை யாற்றலாம். என்று. அன்று திரு எஸ்.யே .வி. செல்வநாயகம் உட்பட அதிக தலைவர்கள் மேடையில் இருந்தார்கள்.

அவர்கள் யாரும் மக்களுக்கு பயப்படவே இல்லை. இன்று கூட்டத்திற்கு செல்லும் மக்களே காவல் துறையால் சோதனை செய்யப்பட்டு உள்ளே விட ப்படுகின்றனர். தலைவர்களால் அரச பாதுகாப்பின்றி நடமாட முடியவில்லை. இந்த தலைவர்களால் விடுதலை கிடைக்குமெனக் காத்திருக்கும் தமிழ் மக்களை என்னவென்று சொல்வது.

அதற்காக அன்றைய தலைவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை. அதுபற்றி இனித்தான் சொல்லப்போகின்றேன். பாராளு மன்ற தேர்தலகள் முடிந்து சிலநாட்களின் பின் பாடுவார்கள் “காணியை வித்தேன் பூமியை வித்தேன் கட்டின பொண்டிலின் தாலியை வித்தேன் அனுப்பிவைச்சேன் ——————— பாராளுமன்றம்” என்று அந்தப்பாடல் தொடரும். தமிழர்கள் தமிழ்பற்றுடன் வாழ்ந்தார்கள்.

இதனால் ஒரு ஊரில் தமிழரசுக்கட்சியின் பொதுக்கூட்டம் என்றால், முற்று முழுதாக அந்த ஊர்மக்கள் இணைந்து. எல்லோரும் பணம்சேர்த்து, மேடை அமைத்து, பெரிய திருவிழாவாக கொண்டாடி தமிழ்தலைவர்களை வர வேற்று, கூட்டங்களை நடத்தி, பாரிய வெற்றிபெறவைப்பார்கள். வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றபின் இவர்கள் நடையாக நடந்து, தங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு செல்வார்கள்.

அங்கு எப்போதும் அவர் மிகவும் வேலைப்பளுவுடன் இருப்பதாக அவருடைய அலுவலக செயலாளர் கூறுவார். தேர்தலின் முன் ஒவ்வொரு ஊருக்கும் வரு வார்கள், தனித்தனியாக மக்களை சந்திப்பார்கள், பேசுவார்கள். தேர்தல் முடி ந்ததும், தேர்தலின் வெற்றி காரணமாக, மக்களை சந்திக்க நேரம் கிடைக்க மாட்டாது.

இது அன்றைய நிலை. இவற்றை கேலிசெய்து திருவிழா என்று ஒரு நாடகம் அன்றைய இளைஞர்களால் அரங்கேற்றப்பட்டதாக எனக்கு ஞாபகம். ஆனா லும் நாம் தமிழ் வெறியர்கள். தமிழை விரும்புவோம். தமிழ் கட்சிகளுக்கே வாக்களிப்போம். அது எங்கள் அறியாமையா அல்லது தலைவிதியா தெரிய வில்லை.

நான் அரசியலில் நாட்டமற்றவன் எனினும் பல அரசியல் சம்பத்தப்பட்ட பெரியவர்களை சந்தித்திருக்கின்றேன். நான் வேலை செய்ய போன இடத்தில் ஒருவரை சந்தித்தேன். காலப்போக்கில் அவருடன் நட்புடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. நட்பாகிவிட்டேன். மிகவும் நல்ல மனிதர். எப்போதும் பண்பாக நடக்கும் குணம் கொண்டவர்.

ஆனால் அவர் அன்றைய யே.வீ. பி. இயக்கத்தின் பலத்த ஆதரவாளன், பங்கா ளன். நான் அவருக்கு நேரடியாகவே சொன்னேன் உன்னை எனக்கு பிடிக்க வில்லை. காரணம் நீ ஒரு தீவிர யே.வீ.பி. ஆதரவாளன். பிறகு தான் தெரிந்தது நான் தேவை இல்லாமல் அவரிடம் வாய்வைத்தது.

அன்று முதல் அவன் எனக்கு வகுப்பு வைக்க தொடங்கிவிட்டான். ஆனால் முழுவதையும் எழுதிவிடமுடியாது. ஒரு சில சொல்கின்றேன். உண்மை எனில் நம்புங்கள் இல்லையேல் விட்டுவிட்டு அடுத்த வேலையை பாருங்கள். அண்மையில் ஒரு அம்மா பேசியதாக ‘யூ-குழாயில்’ ஒரு பதிவு வெளியி டப்பட்டது.

அது சொல்வது யாது? நான் எப்பவும் வீட்டுக்கு தான் போடுவேன். இனியும் அதுக்குத்தான் போடுவேன். ஆனால் அவரிடம் கேட்டால், ஏன் வீட்டுக்கு புள்ளடி போடுகின்றேன் என்பதற்கு விளக்கம் தெரியாது. இதுதான் இந்த தமிழ் கட்சிகளின் ஒரே நோக்கம், மக்களை கவரும் ஒரு கொள்கையை முன்வைத்து, அதன் மூலம் பாராளுமன்றம் செல்லுதல், பின்பு அங்கு கிடை க்கும் உரிமைகள் சலுகைகளை தாங்கள் அனுபவிப்பது.

அதேவேளை ஒருவர் போட்டியிட்ட தொகுதியில், அந்த தொகுதியில் வாழும் எல்லா மக்களும் உதவி செய்தபடியால், அந்த தொகுதியை சேர்ந்த மக்களுக்கு உதவுதல் கடினம். காரணம், எல்லோருமே வேண்டியவர்கள். எனவே அந்த தொகுதி மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரச வேலைத் திட்டங்களை அரசி டமே விட்டுவிட்டால் அரசு பார்த்துக்கொள்ளும்.

தொகுதி என்ற அடிப்படையில் வழங்கப்படும் தொழில்வாய்ப்புகள் அவர்க ளுக்கு உதவிய இளைஞர்களின் எண்ணிக்கையிலும் மிகவும் குறைவாக இருக்கும். எனவே சில இளைஞர்களுக்கு தொழில் பெற்றுக்கொடுத்தால், அது மற்றைய இளைஞர்களுக்கு கோபத்தை வரவழைக்கும்.

எனவே அதையும் அரசிடம் கொடுத்துவிட்டால் எங்களுக்கு சிக்கலில்லை. இப்படியாக எங்களுக்கு கிடைக்ககூடிய வளங்கள் யாவும் அரசிடம் போய்ச்சே ரும். அரசு அதனை தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும். அரசு சார்ந்து அந்த தொகுதியில் இயங்கும் அமைப்பாளர் அல்லது உறுப்பினர் இவற்றை கையாளுவார்.

இந்த விபரம் எதுவும் புரியாத காரணத்தினால் எமக்கு தொகுதிவாரியாக கிடைக்கவேண்டிய சகல வளங்களும் எம்மால் வீணாக இழக்கப்படும். இத ற்கும் மேலாக அரசு சார்பான கட்சிகள் அதிக வேலை வாய்ப்புகள் வழங்கு வார்கள். காரணம் இவர்களுக்கு குறைவான தமிழ்மக்களே உதவி இருப்பா ர்கள். எனவே அவர்கள் மூலம் சுலபமாக வேலை பெறுவார்கள்.

இச் சந்தர்ப்பத்தில் சிங்கள முசுலிம் இன இளைஞர்களும் வேலை பெற முடியும். “ஆத்திலை போறதை அன்னை குடி தம்பி குடி” என்று எல்லோரும் பகிர்வர். இது பொய்யல்ல உண்மை. இதற்கும் மேலாக தமிழ்கட்சிகள் அல்லாத, சிங்களம் சார்ந்த கட்சிகளில் போட்டியிடும் தமிழ் உறுப்பின ர்களுக்கு தமிழ் பிரதேசங்களில் வாக்குகிடைப்பது மிகவும் அரிது.

எனவே இதனை நிவர்த்தி செய்து அவர்களின் வாக்குவங்கிகளை உயர்த்த தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களுக்கும் தமிழ் உறுப்பினர்கள் இடமளிப்பார்கள். எனவே சிங்களம் எம்மை வீழ்த்துவதிலும் தமிழனே வீழ்த்துவான். என்ற உண்மையை எனக்கு விளக்கினான்.

இந்த இடத்தில் தேசிய தலைவர் அவர்கள் கூறிய “எதிரியை வீழ்த்த முன்பு துரோகியை வீழ்த்த வேண்டும்” என்பதை நினைவுபடுத்தி பார்க்கமுடியும். தமிழ்கட்சிகள் தமிழருக்காக இயங்குகின்றது என்று மக்கள் நம்பி. தமிழருக்கு வாக்களிகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்கிறா ர்கள் என்பதை மக்கள் சிந்திப்பதே இல்லை.

ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இதனை சரியாக பயன்படுத்துவர். அதாவது இதுவரை நாம் செய்தவற்றை மக்கள் ஏற்று, மீண்டும் எம்மை தெரிவு செய்கி றார்கள். நாங்கள்தான் அவர்களின் பலம். எங்கள்மீதுதான் நம்பிக்கை வைத்து ள்ளார்கள் எனக் கூறி, தங்கள் பேரம்பேசும் பலத்தை அதிகரிக்கிறார்கள்.

இன்று தமிழ்ஈழம் பெற்றுத்தரும் வல்லமை தமக்கு உள்ளதாக நிறுவ முற்படு கின்றனர். உள்ளுராட்சிக்கு அனுப்புங்கள், மாகாணம் அனுப்புங்கள், பாரா ளுமன்றம் அனுப்புங்கள். அது போதும். நீங்கள் அமைதியாக இருக்க நாங்கள் எல்லாவற்றையும் சாதிப்போம் என்கின்றார்கள்.

தமிழருக்காக உழைக்கும் அறிவார்ந்த அரசியல் பெருமக்களே! 

இலங்கை பாராளுமன்றம் என்பது யாது. அதன் செயற்பாடுகள் என்ன?. அதன்மூலம் சாதிக்ககூடியது என்ன?. தயவு செய்து மக்களுக்கு இதனை தெளிவுபடுத்துங்கள். பாராளுமன்றம் மூலம் எமக்கு ஒரு நல்ல தீர்வு கிடை க்குமா என்பதையும் எடுத்துச்சொல்லுங்கள்.

பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை கட்டுப்படுத்தும் என்பதை விளங்கி, அதனை தடுக்க பிரித்தானியர் விட்டுச்சென்ற பாதுகாப்பும் ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரண்டுடன் முடிவுக்கு வந்தது. அதற்கும் எங்கள் தமி ழர் உதவினார் என்பதையும் சொல்லுங்கள். அரசியல் மட்டும் செய்யாதீர்கள்.

கொஞ்சம் நேர்மையும் கலவுங்கள். மோசடியில் இறங்காதீர்கள். நம்பும் மக்களை ஏமாற்றாதீர்கள். பாராளுமன்றில் உங்கள் நிலை என்ன என்றும், உங்களால் எவற்றை செய்ய முடியும் என்றும் சொல்லுங்கள். இல்லையேல் தமிழருக்கு துரோகம் செய்வோரை இயற்கை தண்டிப்பதை யாராலும் மாற்ற முடியாது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila