மனநோயாளிகளுடன் பேச நேரமில்லை:மணிவண்ணன் விளக்கம்!


kool

“காவாலி” என்று தன்னை விமர்சித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூலை,“மனநோயாளி” என பதிலுக்கு விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய பேரவையின் யாழ்ப்பாண மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன்.
“தேர்தல் பரப்புரைக் காலங்களில் மனநோயாளிகளுக்குப் பதிலளிப்பதுக்கு நாம் விரும்பவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல் என நினைக்கின்றோம். ஆணையாளர் மீது விசாரணை நடத்தமுடியாது எனக் கூறுபவருக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்படுகின்றன என தேர்தல் முடிவடைந்த பின்னர் அறிவீர்கள்” என்று சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘என்னை யாழ்.மாநகர சபை வேட்பாளர் வி. மணிவண்ணன் மிரட்டியதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடைபெறுகின்றது.முறைப்பாடு பதிவு செய்து இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன. காவல்துறையினர் நேற்று எனது வீட்டுக்கு வந்து சமாதானமாக போக விரும்புகின்றீர்களா? என கேட்டனர். நான் அவர்களுடன் சமாதானமாக போக விரும்பவில்லை. அவர்கள் காவாலி தனம் செய்கின்றார்கள். சண்டித்தனத்தில் ஈடுபடுகின்றார்கள். அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பது என்றால் அவர்கள் மனம் திருந்த வேண்டும். ஆனால் அவர்கள் மனம் திருந்தின மாதிரி தெரியவில்லை” என்று யாழ்ப்பாணத்தில் நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு தேடிச்சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் தெரிவித்திருந்தார்.
manivannan_tnpf_party.png
அதற்கு பதிலளித்த வி.மணிவண்ணன் நீதிமன்றில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் காவல்துறையினரே அறிவிக்க முடியும். அவர்கள் ஆதாரங்கள் சாட்சியங்களை வைத்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா இல்லையா? என்று தெரிவிக்க முழுச் சுதந்திரம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரொ அல்லது முறைப்பாட்டாளரொருவர் நீதிமன்றில் தமது விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியில்லை.

தங்களுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக மதவாதத்தையும் சாதியத்தையும் தூண்டிவிடுவதில் கல்விமான்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செயற்படுவது வேதனையான விடயம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட விவகாரம் நீதிமன்றில் சரியாகவே அனுகப்பட்டது. ஆதாரங்களும் இல்லாமல், குற்றச்செயலும் நடக்காமல் எங்களை மாத்திரம் துரத்தித் துரத்தி எங்களுடைய பரப்புரையை முடக்குகின்ற – எங்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு வருகிறார். எம்மைக் காவலி என்று பேசுகின்ற அவர் யார்? என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர். நீதிமன்ற பிடியாணைக்கு மதிப்பளிக்காது தப்பி ஓடி 5 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு வந்த நபர் மற்றவர்களைக் குறை கூறுகின்றார் என மணிவண்ணன் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila