கடற்படை விடுதியில் திருட்டா? சந்தேகத்தில் - பொலிஸ்.!

திருகோணமலையில், கடற்படையின் பொறுப்பில் இருக்கும் விருந்தினர் விடுதியில் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானதென கடற்படை தெரிவித்துள்ளது.
கனேடிய மற்றும் உள்ளூர் சுற்றுலா வாசிகள் 19 பேர், கடற்படைக்குச் சொந்தமான பாதுகாப்பான விருந்தி னர் விடுதியில் கடந்த மாதம் தங்கியி ருந்தனர். கடற்படை அதிகாரியொரு வர் மூலம் முன்பதிவு செய்திருந்த தால், அவர்களுக்கான உணவும் இல வசமாகவே வழங்கப்பட்டிருந்தது. 

இந் நிலையில், கடந்த 30ஆம் திகதி இரவு விடுதிக்குள் மர்ம நபர்கள் சிலர் புகு ந்து தமது பணத்தையும் சுமார் 3 இலட்ச ரூபா பெறுமதியான நகைகளையும் திருடிச் சென்றதாக சுற்றுலாவாசிகள் புகார் தெரிவித்தனர். அது குறித்து விசா ரணை நடத்திய பொலிஸார், திருடு போனதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால் புகார் தெரிவித்தவர்கள் மீது சந்தேகத்துள்ளனர். 

அத்துடன், மறுநாள் தாம் நாடு திரும்ப வேண்டுமெனக் கூறிய சுற்றுலா வாசி கள், சம்பவம் குறித்த பொலிஸ் விசாரணைகளுக்கோ, கடற்படையினரின் விசாரணைகளுக்கோ ஒத்துழைப்பு வழங்காததும் அவர்களது சந்தேகத்து க்குக் காரணம். 

நகைகள் மீது அவர்கள் செய்து வைத்திருக்கும் காப்புறுதியை மோசடியாகப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக பொலிஸாருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்று வசதியாக வாழும் சிலர், நாட்டின் பெயரைக் கெடுப்பதற்காக இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவ தாகத் தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila