அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழின நன்மைக்காக ஒன்றுபடுங்கள் கம்பன் கழக முன்னெடுப்பில் வட கிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்றுபட்டுக் கோரிக்கை

தமிழினத்தின் நன்மைக்காக அனைத்துத் தமிழ் கட்சிகளும் ஒன்று படவேண்டும் என வட கிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்று பட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிலங்கையில் ஏற்பட் டிருக்கும் பெரிய அரசியல் மாற்றம் தமிழ் இனத்திற்கு பெரிய ஆபத்தாக முடியும் என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் இன நன்மை நோக்கி ஒன்றுபடுங் கள் என்னும் தலைப்பில் கம்பன் கழக முன்னெடுப்பில் வடகிழக்கு சமூக பிரமுகர்கள் ஒன்றுபட்டு கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ள னர். அதில் பின்வருமாறு தெரிவிக் கப்பட்டுள்ளது. 

உலகம் ஈழத்தமிழினத்தின் மேல் கொண்ட அனுதாபம் கால
ஓட்டத்தில் மெல்ல மெல்ல கரைந்து வரும் இவ்வேளையில்,தமிழ்த் தலைவர்களான உங்கள் மத்தியில் வெடித்திருக்கும் பகை யுணர்ச்சியும், அதனால் நம் தமிழ்ச் சமூக த்தின் ஒற்றுமைக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளும், நம் இனத்தின் எதிர்காலம் என்னாகப் போகிறதோ? எனும் அச்சத்தை விளைவித்திருக்கின்றன.

பெரும்பான்மையான பேரினத்தார் இன் னும் தமிழ்மக்கள் மீதான தம் வெறுப்பை மாற்றவில்லை என்பதை, வெளிவந்திருக் கும் உள்@ராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தெளிவாக இனங்காட்டியிருக்கின்றன.

தமிழ் மக்களின் பிரச்சினையை அங்கீக ரித்து, உலக அரங்கில் அதை ஒத்துக் கொண்டு, தீர்வு முயற்சியில் ஈடுபட்ட புதிய ஜனாதிபதி யும் பிரதமரும் அவர்களது கட்சிகளும், இத் தேர்தலில் சிங்கள மக்களால் புறந்தள்ளப் பட்டு, கடும் போக்குவாத அரசியல் அணிகள், சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதர வைப் பெற்று நிமிர்ந்திருக்கின்றன. இத்தேர் தல் முடிவை வைத்துக் கணிப்பிடுவதானால்,

அடுத்து இந்நாட்டில் அமையப் போகும் ஆட்சி இனப்பிரச்சினை தீர்வுக்குச் சார்பான தான இருக்காது என்பதை, நிச்சயப்படுத்த லாம் போல் தெரிகிறது. அங்ஙனம் அமையு மாயின் தமிழினத்திற்கான தீர்வுத்திட்டம் என்பது, வெறுங் கனவாகத்தான் அமையும் என்பதில் ஐயமில்லை. தமிழினம் நோக்கி சுனாமியாய்;த் திரும்பியிருக்கும் இவ் ஆப த்தை அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தலை வர்களாகிய நீங்கள் நிச்சயம் எங்களை விட நன்கு அறிவீர்கள் என நாம் நம்புகிறோம்.

இறுதிப்போரில் உயிர், உணர்வு, உடைமை என அனைத்தாலும், கணக்கிடமுடியாத இழ ப்புக்களைச் சந்தித்து, ஏதிலிகளாய் அதிர்ந்து நின்ற நம் மக்கள், உலகம் நம்மில் காட்டிய அனுதாபத்தைப் பயன்படுத்தி, அதனைக் கரு வியாய்க் கொண்டு, நம் இனத் தலைவர்க ளான நீங்கள் ஒருமித்து,

நம் இனத்தின் உரிமைகளை மீட்டெடு ப்பீர்கள் எனும் நம்பிக்கை கொண்டதால் தான், ஏகத்தலைமை என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு வழங்கினர். மற்றைய தமிழ்த் தலைவர்களையும் பகை மறந்து இணை த்து, உங்களைப் பலப்படுத்தி ஒருமுகமாக நின்று பேரினத்தாரோடு உலக அரங்கில் பேசு வீர்கள் என்ற எமது மக்களின் நம்பிக்கை, துரதிர்ஷ்டவசமாகப் பொய்த்துப் போனது. போர் முடிந்து கடந்த எட்டு வருடங்களில், தமிழ்க்கட்சிகள் அனைத்தும், தம்முள் பகை வளர்த்துக் கொண்டு மேலும் மேலும் பிள வுபட்டனவேயன்றி, தமிழினத்தின் நன்மை நோக்கி ஒருமைப்பாட்டுடன் ஓர் அடியைத்தா னும் எடுத்து வைக்காததைக் கண்டு, நம் மக்கள் மிகவும் மனம் வருந்தி நிற்கின்றனர்.  போருக்குப் பின்னான இக்குறுகிய காலத்தில், ஏற்பட்டதான பகையும் பதவி மோகமும், தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை சிதைத் ததை அனைவரும் கவனித்தனர். புதிய நல்லாட்சி அரசாங்கம் காட்டிய ஓரளவான மென்போக்கின் மீதான  நம்பிக்கையில், சில அமைப்புக்கள் இனப்பகையை வளர்க்கும் செயற்பாட்டில் இயங்கி, யதார்த்தமின்றி மக்களை வரலாற்றுப் பாதையில் பின்னோ க்கித் திசைதிருப்பவும் முயன்றன. இவை யெல்லாம் கட்சிப்பிளவுகளால் ஏற்பட்ட பின் விளைவுகளே நடந்தவை நடந்தவையாகட் டும். இனியும் ஒருவர் தோல்வியில் மற்றவர் மகிழ்ந்து,

மேலும் மேலும் பிளவுகளை உருவாக்கி நீங்கள் இயங்கத் தலைப்பட்டால், தற்போது தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் பெரிய அரசியல் மாற்றத்தின் விளைவுகளுக்கு, நம் இனம் பலியாகப்போவது திண்ணம். இவ் உண்மையை நீங்களும் ஓரளவு உணர் ந்து விட்டீர்கள் என்பதை,
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னான உங் களின் அறிக்கைகள் நிரூபணம் செய்கின் றன. அனைவரும் இறங்கிவர முன்வந்திரு க்கும் இந்நிலையில், பழையவற்றைக் கிள றாமல் இனநன்மை நோக்கி,
நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, ஒரு வருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து ஒரே குரலாக, இனியேனும் பேச முன்வரவேண் டும் என, சமூக அக்கறை கொண்ட தமிழி னப் பிரஜைகள் என்ற அடிப்படையில், எந்த வித அரசியல் நோக்கமும் இல்லாமல், ஒருமித்து நாம் கோரிக்கை விடுக்கிறோம்.
தன்மானம் நோக்கியோ, தம் கட்சி நலன் நோக்கியோ ஒருவரோடொருவர் முரண்படா மல், எதிர்கால இனநலனை மட்டும் மனங் கொண்டு, திறந்த மனப்பான்மையோடு பேச்சு வார்த்தை நடத்தி, ஏகத்தலைமை என்ற பிரயோகத்தின் உண்மை அர்த்தத்தை உண்டாக்கி, தமிழினத்தின் நலன் காக்க முன்வரவேண்டுமென, நாம் அனைவரும் ஒருமித்து தமிழ்மக்கள் சார்பாக உங்களை வேண்டிநிற்கிறோம்.
அங்ஙனம் பேசும் பட்சத்தில் ஏற்படக் கூடிய இடையூறுகளை அகற்ற, எம்மாலான பங்களிப்பை நல்கவும் நாம் தயாராக இரு க்கிறோம் என்பதனையும், தங்களுக்குத் தெரியத்தருகிறோம்.

வரலாற்றுப் பேரழிவின் பின்னதான நிர்வாக முயற்சியில் தடுமாற்றங்கள் ஏற்படு வது இயல்பானதே, அத் தடுமாற்றங்களை பகையாய்ப் பதிவு செய்து, இனப்பிளவை மேலும் மேலும் வளர்ப்பதன் மூலம், நம் உரிமை நோக்கிய பயணத்தின் தடைக் கல்லை, நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது என்பதை, பொறுப்புள்ள சமூகப்பிரஜைகள் என்ற வகையில், மீண்டும் மீண்டும் தமிழ்ச் சமூகத்தின் சார்பாக தெரியப்படுத்தி எங்கள் கோரிக்கைக்கான நல்ல பதிலை, அனைத் துக் கட்சிகளிடமும் எதிர்பார்த்து நிற்கிறோம்
பிரமுகர்கள் சார்பில், ஸ்ரீலஸ்ரீ சோமசுந் தர தேசிகபரமாச்சாரிய சுவாமிகள், பேராயர்  கலாநிதி எஸ்.ஜெபநேசன், அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், சிவஸ்ரீ.சோ.ரவிச்சந்திரக் குருக்கள்  (ஆதீனகர்த்தா-திருமலை பத்திர காளி தேவஸ்தானம்), கம்பவாரிதி இ.ஜெய ராஜ், கலாநிதி ஆறு.திருமுருகன், எழுத்தா ளர் அருள் சுப்ரமணியம் (தலைவர்-திருக் கோணேஸ்வரம்) பேராசிரியர் பொ.பாலசுந்த ரம்பிள்ளை (முன்னாள் துணை வேந்தர்), பேராசிரியர்.அ.சண்முகதாஸ், பேராசிரியர் திருமதி மனோன்மணி  சண்முகதாஸ், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, கவிஞர் சோ.பத்மநாதன், எழுத்தாளர் தெணியான், டாக்டர்.கு.ஸ்ரீரத்தினகுமார்  (தலைவர் அ.இ. கம்பன் கழக நம்பிக்கைப் பொறுப்பு), கவிஞர் த.சிவசங்கர் (கம்பன் கழகம்), கலாநிதி ஸ்ரீ. பிரசாந்தன் (கம்பன் கழகம்), பொறியியலா ளர் செ.சொபிசன் (கம்பன் கழகம்), ஆசிரியர் அ.வாசுதேவா (கம்பன் கழகம்), ஐ.தயான ந்தராஜா (ஓய்வுநிலை அதிபர், யாழ்.இந்துக் கல்லூரி), ச.சிவனேஸ்வரன் (ஓய்வுநிலை அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி), கலா நிதி செ.சேதுராஜா (ஓய்வுநிலை அதிபர், நெல் லியடி மத்திய கல்லூரி), இ.சர்வேஸ்வரா - சிரேஷ்ட உதவிப் பதிவாளர், ஊவா வெல்ல ஸ்ச பல்கலைக்கழகம், தென்மராட்சி இலக் கிய அணியினர். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila