சுமந்திரனுக்கு வாகன கதவை திறக்கும் மெய்பாதுகாவலர்கள்: தானே திறந்து கொள்ளும் அநுர

 இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அநுர அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சலுகை  

அந்தவகையில், கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பினை பெற்றுக் கொள்ளவில்லை.

இருப்பினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக காணப்படுகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது அநுர அரசாங்கம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு முகத்தை காட்டி சலுகைகளை வழங்குகின்றதா அல்லது சுமந்திரனுடன் ஏதாவது ஒப்பந்தம் செய்துகொண்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் வாகன கதவுகளை திறந்து விடுவது என்பது ஜனாதிபதிகளுக்கான ஒரு விசேட செயற்பாடாகும். இருப்பினும் ஜனாதிபதி அநுர ஆட்சிக்கு வந்த பிறகு அந்த சலுகை தனக்கே வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். 

சுமந்திரனுக்கு வாகன கதவை திறக்கும் மெய்பாதுகாவலர்கள்: தானே திறந்து கொள்ளும் அநுர | Two Bodyguards Given To Sumanthiran Been Issued

குறிப்பாக அநுர அரசின் கீழ் உள்ள அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் யாரும் பாதுகாப்பு சலுகைகள் எடுத்துக் கொள்ளாத நிலையில், சுமந்திரனுக்கு மாத்திரம் அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

இது தவறான வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச தனது மெய்பாதுகாவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியமைக்கு ஒப்பானதாகவே இது பார்க்கப்படுகின்றது. 

அத்துடன், இந்த செயலானது, பாதுகாப்பு அதிகாரிகளை மலினபடுத்தும் வகையில் இருப்பதாகவும் சுமந்திரன் விடயத்தில் அநுர அரசு துணை போகின்றதா அல்லது சுமந்திரனோடு பயணிக்கின்றதா என்னும் கேள்வி எழுகின்றது. 

எனவே, இது தொடர்பில் அநுர அரசு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர். 


Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila