
முன்வைத்து களமிறங்கியுள்ள சுயேட்சைக்குழு கூட்டத்தில் மது போதையில் வந்த தமிழரசு கட்சியால் குழப்பம் விளைவிக்க எத்தணிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சுயேட்சைக்குழு கூட்டத்தில் தமிழரசு கட்சி வேட்பாளராக கஜமேனன் தனது சிறிய தந்தையை மதுகொடுத்து அனுப்பி கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க முயன்றபோது சுதாகரித்துக்கொண்ட இளைனர்கள் உடனடியாகவே பொலீசாரின் உதவியுடன் குழப்பம் விளைவிக்கவந்தவரை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளியேறிச்சென்றவர் அருகிலுள்ள தமிழரசு கட்சி அலுவலகத்துள் சென்றதையும் அங்கிருந்த தமிழ்கிங்டொத்தின் செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
வன்னி மண்ணின் முதல் மாற்றமாக வருமென கணிக்கப்படும் புதுக்குடியிருப்பு சுயேட்சை அணி எதிர்கால மாற்றத்துக்கான சிந்தனையுடைய இளைஞர்களுக்கு ஒரு ஆரம்பமாக இருக்கும் என நம்பப்படுகிறது.