இலங்கை பெளத்த சிங்கள நாடு என்று கூறுவோர் பெளத்த விகாரைகளை நாடு முழுவதும் நிறுவுவதில் அதிதீவிரம் காட்டி வருகின்றனர்.
அவர்கள்தான் அப்படியயன்றால், ஏனைய சமயங்கள் திறம் என்று சொல்வதற்கும் இல்லை.
நாடு குழம்பிய சூழலைப் பயன்படுத்தி சந்திகள், வீதி வளைவுகள், வெட்டவெளிகள் என எங்கும் சொருபங்களை இரவோடு இர வாக வைத்து விடுவதில் மதவாதிகளும் சில மதக்குழுக்களும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.
தத்தம் சமயம் சார்ந்த கடவுளர்களின் சொருபங்களை நிறுவுவதன் மூலமாக தமது சமயத்துக்கு அடையாளம் தேடுகின்ற வேலை களில் குறிப்பிட்ட கும்பல்கள் ஈடுபட்டு வருகின் றன.
இதன்விளைவாக எங்கள் மண்ணில் மத வாதம் வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது மறுதலிக்க முடியாத உண்மை.
வீதிகளின் ஓரத்திலும் சந்தி மூலைகளிலும் வெட்ட வெளிகளிலும் பொதுஇடங்களிலும் சொருபங்களை அமைப்பதில் சில குழுக்கள் தீவிரமாகச் செயற்படுவதைப் பார்க்கும்போது,
தமிழ் மக்களிடையே மதவாதத்தை ஏற்படுத்தி அதனூடு தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைக்கச் சதி நடக்கிறதோ! என்றுகூட எண் ணத் தோன்றும்.
சொருபங்கள் சட்டவிரோதமாக அமைக்கப் படுவதை நம் அரசியல்வாதிகள் நன்கு அறிந் திருந்தாலும் இது விடயத்தில் கதைத்து; தேர்த லின்போது ஒரு சாராரின் வாக்குகளை இழக்க வேண்டி வந்துவிடும் என்ற பயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் கடவுளர் சொரு பங்களை நிறுவுவது தொடர்பில் வாய் திறக் காமல் இருந்து வருகின்றனர்.
இதுதவிர, எதற்கும் அனுமதி என்று கூறு கின்ற உள்ளூராட்சி அமைப்புக்கள் சொருபங் கள் அமைப்பது தொடர்பில் எந்தக் கருசனை யும் கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரி யது.
சட்டவிரோதமாகக் கடவுள் சொருபங்களை அமைத்தால், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஒரே கொள்கையுடன் பிரதேச சபைகளும் மாநகர, பட்டின, நகர சபைகளும் செயற்படுமாக இருந்தால் திடீர் திடீரெனத் தோன்றும் சொருபங்கள் மறைந்து போகும்.
எனவே இது விடயத்தில் இனிமேலாவது கவனம் எடுத்து குறிப்பிட்ட ஆண்டுக்குப் பின் னர் நிறுவப்பட்ட அத்தனை சொருபங்களை யும் எந்தவித மதவேறுபாடுமின்றி அகற்று வதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
இதைச் செய்யாதவிடத்து எங்கள் தமிழர் தாயகத்திலும் மதக் கலவரம் வெடிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
ஆகையால் வருமுன்னர் காத்தல் என்ப தைப் பின்பற்றுவது இங்கு கட்டாயமான தாகும்.