வவுனியாவில் 195 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேருந்து நிலையம் முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா நிறைவேற்று பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ் புதிய பாதசாரிகள் கடவை அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் பாதசாரிகள் கடவை இல்லாமையால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததுடன், விபத்துக்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமது இந்த பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்த நிலையில் பலன் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.