உள்ளூராட்சி தேர்தல் முடிந்து சபையைப் பொறுப்பெடுத்தல் என்ற மிகப்பெரிய விடயம் இன்னமும் நிறைவேறாமல் உள்ளது.
எனினும் தேர்தலில் வென்றவர் யார்? தோற் றவர் யார்? ஆட்சி அமைக்கக்கூடிய சந்தர்ப் பங்கள் யாருக்கு உள்ளது என்பன ஓரளவுக் குத் தெரிந்தாயிற்று.
இது ஒருபுறம் இருக்க, உள்ளூராட்சி சபைத் தேர்தல் கற்றுத் தந்த பாடங்கள் என்ற விட யமே அரசியல் கட்சிகள் மத்தியில் பேசுபடு பொருளாக இருப்பதைக் காணமுடிகின்றது.
அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கட்சி கள் தத்தம் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு புதுவியூகம் அமைக்கத் தலைப் பட்டுள்ளன.
இதில் தமிழரசுக் கட்சி தேர்தலில் தனக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆழமாக ஆராய்கிறது.
ஏன் பின்னடைவு என்பது ஆய்வுக்குரிய விடய மன்று. ஏனெனில் பின்னடைவுக்கான கார ணம் தமிழரசுக் கட்சியினருக்கு நன்கு தெரியும்.
எனினும் துணிந்து நின்று அதனைச் சொல் வதற்கு எவருக்கும் திராணியில்லை என்பது தான் அங்கிருக்கும் பிரச்சினை.
இருந்தும் அடுத்துவரும் மாகாண சபைத் தேர்தலிலும் இதே கதி என்றால், தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் ஆபத்தானதாகிவிடும்.
எனவே தமக்கு ஏற்பட்ட பின்னடைவை நிமிர்த்தி எடுப்பதற்கான வியூகங்களை அமைப் பது தொடர்பில் அந்தக் கட்சி கடுமையாகச் செயற்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் முன் னாள் வேட்பாளர் க.அருந்தவபாலனைச் சந் தித்து கட்சி நிலைவரம் தொடர்பில் நடத்திய பேச்சு வார்த்தையாகும்.
தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அருந்தவபாலன் இணைந்து கொண்டார் என்ற தகவல் வெளியாகியதும் இனியும் பொறுத் தால் எல்லாம் அம்போ என்றாகிவிடும் என்ற அடிப்படையில் அருந்தவபாலனைச் சந்தித்துக் கதைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை தமிழ ரசுக் கட்சிக்கு ஏற்பட்டது.
தமிழ் மக்கள் பேரவையில் அருந்தவபாலன் இணைந்து கொள்ளாமல் இருந்திருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அருந்தவபாலனைச் சந்தித்திருப்பாரா? என்பது ஆராயப்பட வேண்டியது.
எதுஎவ்வாறாயினும் நல்லது நடந்தால் நல்லது என்பதோடு அந்த விடயத்தை ஒத்தி வைத்துக் கொள்ளலாம்.
இப்போது இங்கு நாம் பேச விளைந்தது காணாமல்போனவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் நடத்தும் தொடர் போராட்டம் பற்றிய தாகும்.
வன்னி யுத்தத்தின்போதும் அதற்கு முன்பாக வும் பின்பாகவும் காணாமல்போனவர்களைத் தேடும் உறவுகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
காணாமல்போன உறவுகளுக்காகக் கண் ணீர் விட்டு ஊன் உறக்கம் மறந்து தவியாய்த் தவிக்கும் எம் உறவுகளைப் பார்க்கும் போதெல் லாம் நம் இதயம் கருகிப் போகும். அந்தள வுக்கு ஒரு துயரம் தொடர்ந்து வருகிறது.
இதுவிடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன. தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுகூடி காணாமல்போனவர்களின் விவகாரம் மற்றும் உறவினர்கள் மேற்கொள் ளும் தொடர் போராட்டம் தொடர்பில் காத்திர மான தீர்மானங்களையும் நடவடிக்கைகளை யும் எடுக்க வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் கட்சி நலன் என்றிரா மல் காணாமல்போனவர்களின் விடயத்துக்கு ஒரு முடிவைக் காண்பது தொடர்பில் தமிழ் அரசி யல் கட்சிகள் அனைத்தும் ஒன்றுகூடி ஒரு முடி வுக்கு வருவது கட்டாயமானதாகும்.