யாழ்.மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட இ.ஆர்னோல்ட் அறிவிக்கப்பட்டுள்ளார். மாநகர மேயரைத் தெரிவு செய்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் வாக்கெடுப்பில் ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். ஈ.பி.டி.பி சார்பாக போட்டியிட்ட ரெமிடியஸ் 13 வாக்குகளையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பாக போட்டியிட்ட வி.மணிவண்ணன் 13 வாக்குகளையும் பெற்றனர்.
|
சட்ட ஒழுங்குகளின் பிரகாரம் ஒரே வாக்குகளைப் பெற்ற இருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. அதில் மணிவண்ணன் நீக்கப்பட்டார். கூடுதல் வாக்குகளைப் பெற்ற ஆர்னோல்ட், குலுக்கல் முறையில் தெரிவான ரெமிடியஸ் ஆகியோருக்கிடையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. எனினும் ரெமிடியஸ் வாக்கெடுப்பில் இருந்து தானாக விலகியதால், ஆர்னோல்ட் மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அதேவேளை, யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி பிரதி மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட துரைராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
|
யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட்! - பிரதி மேயர் ஈசன்
Add Comments