சாவகச்சேரி நகரசபையில், முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சயந்தனின் ஆதரவு பெண்மணி போட்டியில் குதிக்கவுள்ளார்.
இன்று பிற்பகல் சாவகச்சேரி நகரசபையின் புதிய முதல்வர், பிரதி முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இடம்பெறவுள்ளது.
கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்ற, யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, போட்டியில் இறங்கினால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையில் தாமும் போட்டியிடுவதென நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.
அவ்வாறான சூழலில், சயந்தனின் ஆதரவு பெற்ற பெண்மணி சிவமங்கை இராமநாதனின் பெயரை நகர முதல்வர் பதவிக்கு நிறுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருந்தவபாலன் ஆதரவு இளைஞனரொருவனை பதவியிலிருந்த ராஜினாமா செய்ய சயந்தன் பணித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இதனையடுத்து இன்றைய சபை கூட்டத்தின் பின்னர் தனது பதவியிலிருந்து விலகிச்செல்ல குறித்த இளம் உறுப்பினரான சுதர்சன் என்பவர் முன்வந்துள்ளார்.