சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
பிரதித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனி சார்பில் போட்டியிட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகள் பெற்றுக் கொண்டார்.
வாக்குகளின் அடிப்படையில் சாவகச்சேரி் நகர சபையும் கூட்டமைப்பு வசமானது. அதே வேளை யாழ்.மாநகர சபையும் கூட்டமைப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.