வலிகாமம் வடக்கில் மக்கள் பாவனைக்காக அண்மையில் விடு விக்கப்பட்ட சில இடங்கள் திடீரென மீளவும் இராணுவத்தினரால் அப கரிக்கப்பட்டுள்ளன.
இதனால் அப்பகுதி மக்களி டையே பெரும் விசனம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உரியவர்கள் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக இராணுவத்தின் ஆயுத களஞ்சியம் இருந்ததாக கரு தப்படுகின்ற காணி ஆரம்ப நாளில் விடுவிக்கப்பட்டிருந்தது.
குறித்த காணியை சேர்ந்த உரி மையாளர்கள் மற்றும் ஊடகவிய லாளர்கள் காணிக்கு எந்த நேரமும் சென்று வரக்கூடியதாக இருந்தது. எனினும் கடந்த இரு நாட்க ளாக குறித்த பகுதிக்குள் செல்ல இராணுவம் மறுப்பு தெரிவித்து வருகின்றது. இக்காணி க்கு செல்லும் பாதையில் இருந்த காவலரண் அகற்றப்படாமல் தொடர்ந்தும் இராணுவத்தி னர் நிலை கொண்டுள்ளனர்.
உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மயிலிட்டி - கட்டுவன் வீதிக்கு மேற்கு புறமாக உள்ள தென்மையிலை J/240, மயிலிட்டி வடக்கு J/ 246, தையிட்டி கிழக்கு J/ 247 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 683 ஏக்கர் காணிகள் 28 வருடங்களின் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டி ருந்தன. எனி னும் இந்த கிராம அலுவலர் பிரிவு களில் உள்ள காணிகள் முழுவதும் விடுவிக்கப்படா மல் ஆங்காங்கே இராணுவத்தினரது முகா ம்களும் காணப்படுகின்றன.
விடுவிக்கப்பட்ட இடங்களில் காணப்பட்ட இராணுவ முகாம்கள் தற்போதும் உள்ளன. இராணுவத்தினர் அந்த முகாம்களை சுற்றி முட்கம்பி வேலிகளை அமைத்து வருகின்ற னர். இதனால் இராணுவ முகாம்கள் அமை ந்துள்ள காணிகளுக்கு உரிமையானவ ர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர்.
இதே போன்று விடுவிக்கப்பட்ட இடங்களில் எந்த வீடுகளுமே முழுமையாக இல்லை, இராணுவ முகாம்களுக்கு அருகாமை யில் உள்ள வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டு ள்ளன. எனினும் விடு விக்கப்படாமல் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வீடுகள் உடைக்கப்படாமல் காணப்படுவதோடு சில வீடு களை இராணுவம் பயன்படுத்தியும் வருகின்றது.
குறித்த வீடுகளின் உரிமையாளர்கள் தமது வீடுகளுக்கு அருகே செல்ல முடிந்த போதிலும், வீட்டிற்கு உள்ளே செல்ல முடிய வில்லை என்ற கவலையுடன் திரும்பி சென்றதனை காண முடிந்தது.
மேற்படி கிராம சேவகர் பிரிவுகளை இணைக்கும் வீதிகள் சில விடுவிக்கப்படா மையால் தமது காணிகளுக்கு எவ்வாறு செல்வது என்று மக்களிடையே குழப்ப நிலையும் ஏற்பட்டிருந்தது.
இதேவேளை மயிலிட்டியில் மேற்கு பக்கமாக மக்களுக்கு சொந்தமான பல ஏக்கர் காணிகள் இராணு வத்தின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்தும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.