கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக
சுமந்திரனோடு விருந்துண்ண தலைக்கு பத்தாயிரம் ரூபாய்கள் என திக்கெற்விற்ற பிரித்தானிய த.தே.கூட்டமைப்பு கிளை அங்குள்ள இளைஞர்களின் பலத்த எதிர்ப்புக்களை அடுத்து கூட்டத்தை நிறுத்தியது பிரித்தானிய தமிழரசு கிளை.

இருந்தும் திட்டமிட்டபடி சுமந்திரன் இலண்டன் சென்று இரகசியமாக தனது உறவினர்களை சந்தித்ததோடு 20ஆம் திகதி காலை கனடா புறப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இருப்பினும் சுமந்திரன் வரப்போவதாக வசூலிக்கப்பட்ட தலைக்கு பத்தாயிரம் நிதிசேகரிப்பு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் திரும்பவும் கனடாவில் வசூலுக்கு சென்றுள்ளார்.
கனடாவில் கனேடியன் தமிழ் கொங்கிரஸ் அழைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் முழுமையாக தமிழர்கள் கலந்துகொண்டபோதும் சுமந்திரன் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.