ஸ்ரீலங்காவில் ஒரே தினத்தில் அதிக மானோர் காணாமல் ஆக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் இந்த பெயர் பட்டிய லில் 30 சிறுவர்களின் விபரங்களும் அடங் குவதாக ITJP என்ற ஸ்ரீலங்கா வின் உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கவலை வெளியிட்டு ள்ளது. இந்த சிறுவர்களில் பலர் ஐந்து வயதுக்கும் குறைந் தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா அரசினால் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தினமான 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்திடம் சரண டைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்ட 280 பேரினது பெயர் பட்டியலை அவர்களது உறவினர்களின் பங்குபற்றுதலுடன் ITJP இன்றைய தினம் (15.05.2018) யாழ்ப் பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து வெளியிட்டு வைத்தது.
ஒரே தடவையில் நூற்றுக்கணக்கான நபர்கள் ஒரே இடத்தில் வைத்து காணா மல் ஆக்கப்பட்டது தொடர்பில் நாட்டிற்குள்ளும் வெளியேயும் வாழும் நேரில் கண்ட சாட்சியாளர்கள் பலர் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கும் ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா, ஸ்ரீலங்காவில் ஒரே தடவையில் ஏராளமானோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் இது என்றும் தெரிவித்துள்ளனா்.
இந்த பாரதூரமான குற்றம் தொடர்பில் ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியொருவரையும் அதேபோல் முன்னாள் படைத் தளபதி ஒருவரையும் OMP என்ற ஸ்ரீலங்கா அரசின் காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைக் குட்படுத்துவதன் ஊடாக தகவல்களை அறிந்துகொள்ள முடியும் என்று ஸ்கைப் வழியாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்துகொண்ட யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
நாம் மூன்று விடையங்களை OMP அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியிருக்கின் றோம். இந்த சம்பவம்தான் இந்த விசாரணைகளின் போது அவரால் மிக முன் னுரிமை கொடுது்து செயற்பட வேண்டிய மிகவும் முக்கியத்துவமான காணாமல் ஆக்கப்பட்ட சம்பவமாகும்.
இரண்டாவதாக நாம் கூறிய விடையம் தான், சரணடைந்த போது 58 ஆவது படையணி தான் அதற்கு பொறுப்பாக இருந்தது. அதன் காரணமாக ஏதாவது விசாரணையொன்று நடைபெறுமானால் அந்த விசாரணைக்கு முதன் முத லில் அழைக்கப்பட வேண்டிய நபர் தான் 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை அழைக்க வேண் டும்.
அதேவேளை ஜெனரல் ஜகத் ஜயசூரியவையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்க ளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் பதிலளிக்க வேண்டிய கடப் பாடு இருக்கின்றது.
அதேபோல் நாம் ஸ்ரீலங்காவில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளில் வாழ்பவர்களிடமும் இந்த சம்பவங்கள் தொடர்பில் காணொளி தகவல் பரி மாற்றம் ஊடாக சாட்சியங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதனை ஸ்ரீலங்கா தூதரகத்திற்குள் வைத்து நடத்த முடியாது. அது பாதுகாப்பும் இரகசியத் தன்மையும் உறுதிப்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். அதே வேளை சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பில் எம்மத்தியில் தொடர்ந்தும் கவ லைகளும், கரிசணைகளும் காணப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் மற்றும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீவரத்னம் புலத்தேவன் ஆகியோர் வட்டுவாகல் பாலத்தில் வைத்து மே மாதம் 18 ஆம் திகதி 58 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கைலாகு கொடுத்ததை கண்ணால் கண்ட சாட்சிகளும் இருப்பதாகவும் அவர்கள் இந்த சாட்சிகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் நேரடியாக தெரிவித்தி ருப்பதாகவும் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சரணடைந்த நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட தமிழீழ விடு தலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் 58 ஆவது படையணியினரால் பின்னர் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுடன் கத்தோலிக்க அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பும் வட்டுவாகல் பாலத்தில் வைத்து சரண டைந்த போது இறுதிக்கட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில் வன்னி கட்டளைத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய வும் இருந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.
இதனால் OMP என்ற ஸ்ரீலங்கா அரசின் காணாமல் போனோர் அலுவலகம் போரின் இறுதி நாட்களில் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ஒப்படைக்கப்பட்டவர்களின் பட்டியலை உடனடியாக படையினரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வட மாகாண அமைச்சரான அனந்தி சசிதரன் மற்றும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பெற்றோர் உட்பட உறவி னர்கள் ஆகியோர் ஸ்ரீலங்கா அரசு குறித்தோ அதனால் அமைக்கப் பட்டுள்ள காணாமல் அலுவலகம் தொடர்பிலோ நம்பிக்கை கொள்ள முடியாது என்று தெரிவித்தனர்.
அதேவேளை இதன்போது மே-18 ஆம் திகதி இராணுவத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளை இன்று வரை தேடி அலையும் அம்மாக்களும் ஊடகவிய லாளர் சந்திப்புடன் இணைந்துகொண்ட யஸ்மின் சூகாவிற்கு தமக்கு நேர்ந்த கொடூரங்களை தெளிவுபடுத்தினர்.
எவ்வாறாயினும் நீதியைத் தேடும் இந்தப் பயணம் மிகவும் கடினமானது என்று தெரிவித்த ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா, அனைவரும் இணைந்து OMP யிடம் பதிலை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக தன்னாலான அனைத்தையுமு் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ITJP இன் பணிப்பாளர் யஸ்மின் சூகா உறுதியளித்துள்ளாா்.
-நன்றி - ஐ.பி.சி இணையத்திற்கு.