"வெள்ளை வானில் ஏத்துவோம்” - வடமராட்சி கிழக்கு மக்களுக்கு புலனாய்வாளர்கள் மிரட்டல்


கடலட்டை வாடிகளுக்கு எதிராக நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியவர்களுக்கு கடற்படை புலனாய்வாளர்களால்,கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

வடமராட்சி கிழக்கு,தாளையடி,மருதங்கேணி,செம்பியன்பற்று கடற்ப்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடிகளை அமைத்து கடலட்டை பிடிப்பதால்,வடமராட்சி கிழக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தை நடத்தியவர்களில் பலருக்கு தொலை பேசி மூலமாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளை வானில் ஏத்துவம் 4ம் மாடி பார்க்க ஆசையாக இருக்கிறதா என்று அச்சுறுத்தலை கடற்ப்படையின் புலனாய்வாளர்களால் விடுக்கப்படுவதாக இன்று (29)மருதங்கேணி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பிரதேச செயலருடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதாக பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். குறித்த கடலட்டை வாடி தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்படாது கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

எதிர்வரும் 1ம் திகதி கடற்றொழிலாழர் கூட்டுறவுச் சங்க சமாசத்தின் கலந்துரையாடலில் முடிவுகள் எட்டப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.தவறினால் மாபெரும் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila