குயிலினம் போல வாழப் பழகாதீர்

பறவை இனங்களில் குயிலினத்தை யாரும் உயர்வுபடுத்திக் கூறுவதில்லை. அதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

அதில் ஒன்று, யார் கூவினாலும் தன்னினம் கூவுதாக நினைத்து தானும் கூவுவது. இரண் டாவது காரணம் கூடு கட்டி அதில் முட்டையிட்டு அடை காக்கத் தெரியாமை. மூன்றாவது விட யம் குயிலின் ஒழுக்கம் சார்ந்தது என்பதால் அதனை இங்கு விட்டுவிடலாம்.

குயிலினம் எப்போதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கும். தான் கூவுவது எதி ரொலித்தால் கூட தன் உறவுக் குயில்கள் கூவுவ தாகக் கருதி திரும்பத் திரும்பக் கூவுதல். 

தவிர மனிதர்கள் யாரேனும் பதிலுக்குக் கூவினால் அதனையும் தன்னினம் சார்ந்த வர்களின் கூவல் என்று கருதி உச்சஸ்தாயி வரை கூவுதல் குயிலினத்தின் அறியாமை யைக் காட்டும்.

இதுஒருபுறமிருக்க காகத்தின் கூட்டுக்குள் முட்டையிடுவதுதான் குயிலினத்தின் கெளரவக் குறைவுக்கு மிகப்பெரிய காரணம் எனலாம்.
சொந்தமாகக் கூடுகட்டி அதில் குஞ்சு பொரி த்து தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கின்ற அந்தத் தாய்மை குயிலினத்துக்கு இல்லாமல் போயிற்று.
காகத்தின் கூட்டில் முட்டையிட்டுவிட்டு தன் பாட்டில் போய்விட, காகமே குயில் குஞ்சுகளுக் கும் இரை கொடுத்து வளர்க்கிறது.

இதனால்தான் காகத்தை நம்மவர்கள் கூவி அழைத்து உணவு கொடுக்கின்றனர். மேலும் தன் குஞ்சுக்கு இரை கொடுக்க முடி யாத குயில்களால் தன்னினம் கூவுகிறதா? அல்லது மனிதர்கள் கூவுகிறார்களா? என் பதை அறியமுடியாமல் போயிற்று என்று கூறு வதில் உளவியல் நியாயம் இருக்கவே செய் கிறது.

இவ்வாறாக சொந்த இடத்தில் சொந்தமாக கூடுகட்டி குஞ்சு பொரித்து வாழத் தெரியாத குயில்கள் காகத்தின் கூட்டில் முட்டையிடும் தரம் குறைந்த பண்பாட்டைக் கொண்டிருப்பது போல,
ஒரு சில இனம் சார்ந்த மக்களும் மற்றவர் களின் இடங்களை ஆக்கிரமிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.

இத்தகையவர்கள் தங்களின் செயலை உயர்வாகக் கருதிக் கொண்டால் அதுவே அவர்களின் அறியாமை எனலாம். இவற்றை ஒருபுறம் வைத்துக் கொள்வோம்.
இப்போது எங்கள் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி குடிசை அமைத்து கடலட்டை பிடிக்கின்ற தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

தென்பகுதி மீனவர்கள் கடற்றொழிலில் ஈடு படுவதற்கான வளங்களும் வசதிகளும் தாராள மாக இருக்கின்றபோதிலும், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் அத்துமீறி குடிசை அமைத்து கடலட்டை பிடிப்பதென்பது எந்தளவு தூரம் நியா யம் என்பதை தென்பகுதி சார்ந்தவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

இதுதவிர, இவ்வாறான அத்துமீறல்கள் ஆளும் இனம் என்பதாலும் நடக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்போது அங்கு இன ஒற் றுமை என்பது சிதைவுறுகிறது.
எனவே இத்தகைய செயல்களை சிங்கள மக்கள் முற்றாகக் கைவிட வேண்டும். கூலிக்கு மாரடிப்பதுபோல தமிழர் பகுதியில் நுழைந்து அவர்களின் தொழில் வளத்தை சுரண்டுவ தென்பது அடிப்படை நியாயமற்றது.
ஆகையால் தென்பகுதி மக்கள் குயிலினத் தின் பண்பாட்டைப் பின்பற்றாமல் தவிர்க்க வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila