வத்தளை, எலகந்த, உஸ்வெட்டகெய்யா கடற்கரையில் இருந்து முத்துராஜவெல பகுதியில் எண்ணெய் குழாய் ஒன்று உடைத்தமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 5 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கச்சா எண்ணெய் 50 டன் கடலுக்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
எண்ணெய் குழாய் உடைந்து கடலில் கலந்து கொண்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகும் வரை, அது தொடர்பில் கூட்டுத்தாபன அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை.
சுமார் நான்கு மணித்தியாலங்களாக எண்ணெய் கடலில் கலந்துள்ளது. எண்ணெய் குழாயில் 200 அடிப்பகுதி கடல் நீரில் கரைந்து சென்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்த அனர்த்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.