எமதருமை தமிழ் மக்களே! முத்தநாதர்கள் வருவர் மெய்ப்பொருளாய் இருந்துவிடாதீர்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்களில்  மெய்ப் பொருள் நாயனாரும் ஒருவர். ஒரு நாட்டின் அர சர். மிகச் சிறந்த சிவபக்தர். 

மெய்அடியார் களைக் கண்டால் அவர்களைத் தொழுது வணங்கும் பக்குவம்மிக்கவர். இவ் வாறாக சிவசிந்தையோடு ஆட்சி செய்த மெய்பொருள் நாயனாருக்கும் ஒரு பகைவன் இருந்தான். அவன் முத்தநாதன் எனப் பெயர் கொண்டவன்.

மெய்ப்பொருள் நாயனாரைக் கொல்வதற்கு அவன் சதி செய்கிறான். மெய்ப்பொருள் நாய னார் சிவ அடியார்களைக் கண்டால் அவர் களை வணங்கி ஏற்றுவார் என்பதை அறிந்து கொண்ட முத்தநாதன், தன் உடம்பு முழுவதும் திருநீற்றைப் பூசியபடி தலைமுடியை வாரிக் கட்டி, கையினில் ஒரு புத்தகத்தை எடுத்து  அதற்குள் கூரிய ஆயுதமொன்றை வைத்துக் கொண்டு மெய்ப்பொருளின் அரண்மனை நோக்கிச் செல்கிறான்.

தம் அரசனின் மனநிலை அறிந்த காவலர் கள் முத்தநாதனைக் கண்டதும் எழுந்து ஐயன் மின் வருக... வருக... என்று இருகரம் கூப்பி வரவேற்றனர். அரசர் இருக்கும் மனைவாச லில் தத்தன் என்பவன் காவல் செய்கிறான்.

முத்தநாதனின் கோலத்தைக் கண்ட தத் தன் அவன் மீது சந்தேகம் கொண்டு; இப் போது மன்னரைச் சந்திக்க முடியாது. அவர் நித்திரையாக இருக்கிறார் என்கிறான். 

எனினும் முத்தநாதன் விடுவதாக இல்லை. உங்கள் மன்னருக்கு வேதம் மந்திரத்தை ஓத வேண்டும். ஆகையால் நான் மன்னரைச் சந்தித்தே ஆக வேண்டும் என்கிறான்.

எதுவும் செய்ய முடியாதநிலையில், மெய்ப் பொருளைச் சந்திக்கின்ற வாய்ப்பு முத்தநாத னுக்குக் கிடைக்கிறது. அவனின் தோற்றப் பொலிவைக் கண்ட மெய்ப்பொருள் எழுந்து வணங்கி நிற்கிறார். 

கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த நினை த்த முத்தநாதன் புத்தகத்தில் மறைத்து வைக் கப்பட்டிருந்த ஆயுதத்தை எடுத்து மெய்ப்பொருள் நாயனாரைக் குத்தி விடுகிறான்.

அந்தோ! மன்னன் துடிக்கிறான். நிலைமை யைப் புரிந்து கொண்ட தத்தன் ஓடிச் சென்று முத்தநாதனைக் கொல்ல முற்படும் வேளை,  தத்தா கொல்லாதே அவரைப் பாதுகாப்பாக ஊரின் எல்லையில் விட்டு வருக என்கிறார்.

மன்னனின் கட்டளையை தத்தன் நிறை வேற்றி விட்டு, முத்தநாதன் பாதுகாப்பாக ஊர் எல்லை கடந்தான் என்று செய்தி சொல்ல, தத்தா இன்று எனக்கு நீ செய்த உதவி யார் செய்வார் என்று கூறியபடியே மன்னன் மெய்ப் பொருள் மரணித்துப் போகிறார்.

மெய்ப்பொருள் நாயனாரின் வரலாற்றைப் படிக்கும்போதெல்லாம் ஏன்தான் அவர் இப்படி நடந்து கொண்டார். 

ஒரு காவலாளிக்கு இருந்த சந்தேகம் கூட, மெய்ப்பொருளுக்கு ஏற்படாதது ஏன்? என்றெல் லாம் நினைப்பதுண்டு. யார் என்னதான் கூறி னாலும் மெய்ப்பொருளின் செயலை ஒரு புத்தி சாதுரியமான செயலாக எம்மால் கருதமுடிய வில்லை இது கதை. இந்தக் கதைக்குள் ஒரு நிஜம் இருக்கிறது. 

ஆம், மிக விரைவில் ஒரு சில அரசியல் கட்சிகள் தங்களைப் புனரமைப்பது என்று கூறிக்கொண்டு முத்தநாத வடிவத்தில் வரத் தயாராகியுள்ளனர்.

இதற்காக முல்லைத்தீவில் ஒன்றுகூடி தவறு கள் நடந்ததுபோல கதை அளந்திருக்கின்றனர். 

இதுதான் முத்தநாத வடிவத்தின் முதல் அறி குறி. தமிழ் மக்களே! மெய்ப்பொருள் நாயனார் களாய் இருந்து விடாதீர்கள்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila