என்ர குடும்பம்; என்ர பிள்ளை; என்ர தேவை என்பதுதான் இன்றைய தமிழ் அரசியலின் பயணமாக உள்ளது.
அதாவது எரிகிற வீட்டில் எடுப்பது மிச்சம் என்பதுபோல நம் அரசியல் தலைமை நடந்து கொள்கிறது.
என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் ஜனாதிபதி யுடன் பேசுகிறோம், பிரதமரைச் சந்திக்கின் றோம் என்பதோடு அந்தப் பிரச்சினை பற்றி மறந்து போபவர்களாகவே நம் அரசியல் தலைமை இருக்கின்றது.
தமிழ் அரசியல் கைதிகள், காணாமல்போன வர்களின் குடும்பங்களின் அவலம், போரழி வில் எல்லாவற்றையும் இழந்து நடுத்தெரு வில் நிற்கும் குடும்பங்கள், பெற்றோரை இழ ந்து அநாதை இல்லங்களில் தங்கியிருக்கும் சிறார்கள் என்ற துன்பியலுக்கு அப்பால்,
தமிழர்கள் என்பதால் அவர்களின் காணி களைக் கபளீகரம் செய்துள்ள படைத்தரப் பினரின் நாசகாரம், தமிழர் தாயகத்தில் இடம் பெறும் சட்டவிரோத குடியேற்றங்கள் என்ற நீண்டதொரு ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல்,
இவற்றுக்கு மேலாக தமிழர்களின் வளர்ச் சியை - எழுச்சியை வெட்டிச் சரிக்கின்ற முயற் சிகள் எனப் பல்வேறு சம்பவங்கள் தாராள மாக நடந்தாகின்றன.
எனினும் இவை தொடர்பில் தமிழ் அரசியல் தலைமை எந்தவித நடவடிக்கைகளையும் எடுத்ததாக இல்லை.
நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு அப்பால், இப்படியான சம்பவங்கள் பற்றி அவர் களுக்குத் தெரியுமா? என்பது கூடச் சந்தேகம் தான்.
ஆம், தமிழ் இனத்துக்காக சேர் பொன். இராமநாதன் அவர்கள் ஈந்தளித்த யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் இன்று சிங்கள மாணவர்களுக்குரியதாகிவிட்டது. இனி அத னைக் கட்டுப்படுத்த முடியாது என்றளவில்தான் நிலைமை இருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப் பீடம், வர்த்தக பீடம், சட்டத்துறை ஆகிய பட்டப் படிப்புக்கள் யாவும் முதல் வருடத்தில் தமிழ் மொழியில் இடம்பெறும் என்றொரு நிபந்தனை களை விதித்திருந்தால் யாழ்ப்பாணப் பல் கலைக்கழகம் தமிழ் மாணவர்களைப் பெரு மளவில் கொண்டிருக்கும் பல்கலைக்கழகம் என்பதைத் தொடர்ந்து கட்டிக் காத்திருக்க முடியும். அதனைச் செய்யாததால் இன்று நிலைமை வேறுவிதமாகிப் போயிற்று.
எங்கள் பல்கலைக்கழகத்தின் தரம் என்று கூறும் தமிழ்ப் புத்திஜீவிகள் இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து ஓய்வுபெறும்போது எழுபத் தைந்து வீதமான விரிவுரையாளர்கள் பெரும் பான்மை இனம் சார்ந்தவர்களாக இருப்பர் என்பது சர்வநிச்சயம்.
எனினும் இதுதான் நிலைமை என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நம் அரசியல் தலைமை எதையும் செய்யப் போவதில்லை.
இந்த வரிசையில் தமிழ் அரசியல் கைதி களை விடுவிக்க அரசுக்கு எந்த நிபந்தனை யையும் தமிழ் அரசியல் தலைமை விதிக்காது என்பதை எந்தக் கோயிலிலும் சத்தியம் செய்யத் தயார்.