மன்னராட்சியாயினும் மக்களாட்சியாயி னும் தர்மத்தின் வழியில் அரசாட்சி செய்ய வேண்டும். இதுவே அறம் உணர்ந்தவர்கள் வகுத்த நியதி.
மன்னராட்சியில் கொடுங்கோலாட்சி நடந்த தன் காரணமாகவும் மனித சமூகத்தில் ஏற் பட்ட அறிவு வளர்ச்சி காரணமாகவும் முடி யாட்சி அகன்று மக்களால் தெரிவு செய்யப் படுகின்ற ஜனநாயக ஆட்சி அறிமுகமாயிற்று.
எனினும் மன்னராட்சி அனைத்தும் கொடுங் கோலாட்சி என்று யாரும் நினைத்துவிடக் கூடாது.
பசுமாடு ஒன்று தன் கன்றை இழந்த வேத னையை மன்னனிடம் எடுத்துக் கூறியபோது, மனுநீதிச் சோழ மன்னன் தன் மகன் வீதி விடங்கனையே தேர்க்காலில் வைத்து மரண தண்டனை கொடுத்தவன்.
அந்தளவுக்கு மன்னர் ஆட்சியில் நீதி உச் சம் பெற்றிருந்தது என்பதையும் இங்கு கூறித் தானாக வேண்டும்.
அதேநேரம் ஜனநாயகம் எனும் மக்களாட்சி யில் எங்கும் நீதி, நியாயம் நிலைநாட்டப்பட் டதா? என்றால் அதுவும் இல்லை என்பதே பதி லாகும்.
கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாக ரன் என்பவர் தண்டனை பெற்ற ஓர் அரசியல் கைதி.
அவரின் மனைவி சுகவீனம் காரணமாக இறந்து போக அவரின் சிறுபிள்ளைகள் அநாதை களாகினர்.
இந்நிலையில் அந்தப் பிள்ளைகள் இந்த நாட்டின் மன்னராக இருக்கக்கூடிய ஜனாதி பதியைச் சந்தித்து எங்கள் அம்மாவை இழந்து விட்டோம் எங்கள் அப்பாவுக்கு மன்னிப்பு வழங்கி எங்களுக்காக எங்களோடு அவரை வாழவிடுங்கள் என்று இரந்து கேட்டனர்.
ஜனாதிபதியும் அடுத்த புத்தாண்டில் உங்கள் தந்தை உங்களோடு இருப்பார் என்று உறுதி மொழி வழங்கினார்.
அந்தப் பச்சிளம் குழந்தைகள் ஜனாதிபதி யின் வாக்குறுதியை நம்பி வீடு வந்தனர்.
ஆனால் தந்தை ஆனந்தசுதாகரனும் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை.
இப்போது நம் கேள்வி மனுநீதிச் சோழ மன்னனின் கதையை அந்தப் பிள்ளைகள் படிக்கின்றபோது பசுவுக்கு வழங்கப்பட்ட நீதி கூட எங்களுக்கு வழங்கப்படவில்லையே என்று வேதனை கொள்வார்கள்.
என்ன செய்வது இதுதான் தமிழர்களின் தலை எழுத்து என்றால், இலங்கைப் புகை யிரதத் திணைக்களமும் தமிழ் மக்களுக்கு கேடு நினைத்து சில அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றதோ என்று எண்ணத் தோன்று கிறது.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் ஆத்திசூடி புகையிரதக் கடவையில், இரண்டாவது தடவை யாக புகையிரத வண்டியுடன் கார் மோதுண் டுள்ளது.
புகையிரதப் பாதையின் உயரமும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்குகளின் தெளிவற்ற தன்மையும் காரணமாக இந்த விபத்து நடக்கிறது எனினும் இதுபற்றி புகை யிரதத் திணைக்களம் பேசாதிருக்கின்றது.
இஃது தமிழர்களின் மரணத்தில் புகையிர தத் திணைக்களமும் பங்களிப்புச்செய்ய வேண் டும் என்று யாரேனும் தீர்மானம் எடுத்தார் களோ என ஐயம் கொள்ளும் அளவிலேயே வடபுலத்தில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை கள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.