வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களிடையே நேற்றைய தினமும் கடும் மோதல் நடைபெற்றது. சபை அமர்வில் மோதல் தீவிரம் பெற்ற போதிலும், இரண்டு மணிநேரங்களில் அனைத்து மோதல்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, முதலமைச்சரினை எதிர்த்தவர்கள் அனைவரும் முதலமைச்சரினை புகழ்ந்து பேசினார்கள்.
வடக்கு மாகாண சபையின் கடந்த அமர்வில் விவசாய அமைச்சர் பொ.ஐந்கரநேசன் மீது கொண்டுவரப்பட்ட ஊழல் மோசடி தொடர்பான குற்றச்சாடுக்கள் சபை குறிப்பேட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும். என முதலமைச்சர் சபையில் தெரிவித்ததனை அடுத்தே உறுப்பினர்கள் சிலர் பாம்பாக சீறினார்கள்.
ஆரம்பத்தில் நாக பாம்பாக சீறிய உறுப்பினர்கள், முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோரது தெளிவுபடுத்தல்களை அடுத்து அனைத்து உறுப்பினர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி போயினர். வாக்கு மாகாண சபையின் நாற்பத்தி ஆறாவது அமர்வு நேற்றைய தினம் கைதைடியில் அமைந்துள்ள பேரவை செயலகத்தில் பேரவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இதன் போதே கடும் மோதல் வெடித்தது.
மோதல் ஆரம்பம்
அமைச்சர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை அவைக்குறிப்பேட்டிலிருந்து நீக்குமாறு கோரி, வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் எட்டுப்பேரினால் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இக்கடிதத்தை சபையில் வாசித்த முதலமைச்சர், குற்றச்சாட்டுக்களை அவை குறிப்பு ஏட்டிலிருந்து நீக்குமாறும் கோரினார்.
இதன் போது சில உறுப்பினர்கள் முதலமைச்சர் இவ்வாறு பதிலளிக்க முடியாது என கெம்ப, எழுந்த உறுப்பினர் சர்வேஸ்வரன் நீங்கள் குற்றச்சாட்டினை முன்வைத்து கேள்விகளை கேட்டிருந்தீர்கள், அதற்கான பதிலை முதலமைச்சர் பதிலை வழங்கிவிட்டார். ஆகையால் முதலமைச்சரது பதிலில் திருப்தி இல்லையா? அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் முதலமைச்சரிடம் கேளுங்கள் என கூறினார்.
ஜோசிதவுக்கு மகிந்த, ஐந்கரநேசனுக்கு விக்கி
இதன் போது குறுக்கிட்ட உறுப்பினர் சயந்தன், முன்னாள் ஜனாதிபதியின் மகன் ஜோசித ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, தனது மகனுக்காக கருப்பு கோட் அணிந்து நீதிமன்றில் ஆஜராகி இருந்தார். அதே போல் அமைச்சர் ஐங்கரநேசன் மீது நாங்கள் குற்றச்சாட்டு முன்வைக்க, அமைச்சருக்கு ஆதரவாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கருப்பு கோட் அணிய தயாராகியுள்ளார். என சயந்தன் கூறினார்.
இதன் போது மீண்டும் குறுக்கிட்ட உறுப்பினர் சர்வேஸ்வரன் அமைச்சர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை முதலமைச்சரிடம் கையளித்துள்ளீர்கள் ஆகவே அவை தொடர்பான விடயங்களை முதலமைச்சர் ஆராய்ந்து உங்களுக்கு பதில் வழங்கியுள்ளார். அந்த பதிலில் திருப்தி இல்லை எனில் மீண்டும் அவரிடம் கேள்வியை கேளுங்கள். அதனை விடுத்து சம்பந்தமில்லாத விடயங்களோடு முதலமைச்சரினை தொடர்பு படுத்தாதீர்கள். என ஆவேசத்துடன் கூறினார்.
ஆதாரம் எம்மிடம் உண்டு
அமைச்சர் ஐங்கரநேசன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாராங்கள் எம்மிடம் உண்டு. அவர் மீது எம்மால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு முதலமைச்சருக்கு உண்டு. ஆனால் அதற்கு மாறாக மேற்படி விடயத்தை சபை குறிப்பு ஏட்டிலிருந்து நீக்குமாறு முதலமைச்சர் கோருவது சபையை அவமதிக்கும் செயலாகும் என அஸ்மின் கூறினார்.
கடந்த அமர்வின் போது எம்மிடையே உட்கட்சி மோதல் நடைபெறுகின்றது. இதனை சபை ஆரம்பமாவதற்கு முன்னர் பேசி தீர்க்கலாம் என எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன் கூறியது வரவேற்கத்தக்கது. யாருக்கு எதிராகவும் கையெழுத்து வேண்டுமென்றால் நாங்கள் வேண்டும். ஏனையவற்றுக்கு நாங்கள் தேவையில்லை. இவ்வாறு தான் சிலருடைய செயல் நடைபெறுகின்றது.
வாக்களித்த மக்கள் பார்க்கிறார்கள்
எம்மை நம்பி எமக்கு வாக்களித்த மக்கள் நாங்கள் இங்கு போடும் கூத்துக்களை எல்லாம் பார்த்து கொண்டே உள்ளார்கள். தொலைக்காட்சிகள், பத்திரிகைள் இங்கு நடப்பவற்றை எல்லாம் கிழித்து கிழித்து எழுதுகின்றார்கள். இங்கு நடைபெறும் எல்லா மோதல்களுக்கும் சபையை நடாத்தும் விதமே காரணமாகும்.
சபை அமர்வுக்கு முன்னதான உறுப்பினர்களது கூட்டத்தின் போது, நான் கருத்து சொல்வதற்கு மூன்று தடவை எழும்பினேன் எனினும் அவைத்தலைவர் என்னை பார்க்கவில்லை. பேச அனுமதிக்கவுமில்லை. எனினும் மற்றவர்கள் தேவையற்ற வவிடயங்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தான் இன்று சபை நாடாத்தும் விதம் என அவைத்தலைவரை மறைமுகமாக சாடினார் உறுப்பினர் பசுபதிப்பிள்ளை.
அரசியலில் இருந்து விலகுவேன்..!
இதன் பின்னர் எழுந்த உறுப்பினர் லிங்கநாதன், விவசாய அமைச்சர் மீது எமக்கு தனிப்பட்ட வகையில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை. ஆனால் அவரது சேவையில் நாங்கள் குற்றஞ்சாட்டி அதனை விசாரணை செய்யுமாறு, முதலமைச்சரிடம் கோரியுள்ளோம். ஆகையால் விசாரணை செய்தால் உண்மை தெரியும்தானே.
அதனை விடுத்து ஏன தேவையில்லாமல் பயப்படுகின்றீர்கள்? அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுங்கள். அவர் மீது குற்றமில்லை, நான் தான் வேணுமென்று குற்றம் சாட்டினேன் என்றால், இந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுவதோடு, எனது அரசியல் வாழ்விலிருந்தும் விலகுவேன் என சாவால் விட்ட லிங்கநாதன்,
இலஞ்ச ஆணைக்குழுவில் முறையீடு.!
ஒரு மாத காலத்திற்குள் நாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படாவிட்டால், நான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் அமைச்சருக்கு எதிராக முறையிடுவேன் எனவும் லிங்கநாதன் ஆவேசத்துடன் கூறினார். மேலும் நான் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடுவதனை எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வீராப்பு பேசினார்.
இதன் போது குறக்கிட்ட உறுப்பினர் சிவநேசன், கடந்த அமர்வில் அமைச்சர் ஐந்கரநேசனுக்கு எதிரான பிரேரணை கொண்டுவந்த முறை தவறானது. நான் இதன் போது நின்றிருந்தால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பேன். ஆளுங்கட்சி கூட்டத்தில் ஏன் கலந்துரையாடப்படாமல் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டது. இது உள்நோக்கம் உடைய செயற்பாடு ஆகும் எனவும் சாடினார்.
இரகசிய சந்திப்பை போட்டுடைத்த உறுப்பினர்.!
மேலும் ஆளும் தரப்புக்குள்ளான மோதலை பார்க்கையில் இங்கு வடக்கு மாகாண சபையினை வினைத்திறனான சபையாக செயற்படவிடாமல் தடுப்பதற்கு பேரினவாத சக்திகளின் ஊடுருவல் சபையில் காணப்படுவதாக ஒரு புரளியையும் சிவநேசன் கிளப்ப, உடனே எழுந்த உறுப்பினர் சயந்தன், பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து இயங்கியவர்களின் சிந்தனை அவ்வாறு தான் இருக்கும் என ஒரு போடு போட்டார்.
இவ்வாறு சிவநேசன் பேசிக்கொண்டு இருக்கும் போது இடையிடையே உறுப்பினர் அஸ்மின் குறுக்கிட ஆத்திரமடைந்த சிவநேசன், நீங்கள் என்னத்துக்கு வடக்கு மாகாண சபை விடயத்தை கதைப்பதற்கு எம்மை அடிக்கடி யூ.எஸ் ஹோட்டலுக்கு அழைத்தீர்கள் என ஒரு போடு போட்டார்.
உண்மையை சிவநேசன் போட்டுடைத்தமையால் மீண்டும், சூடாகிய அஸ்மின் அது வடக்கு மாகாண சபை பற்றிய விடயத்தை கதைப்பதற்கு ஹோட்டலுக்கு அழைக்கவில்லை. கட்சி விடயத்தை கதைப்பதற்கே அழைத்தோம், என அஸ்மின் கூறியதோடு, சிவநேசன் தவறாக கூறியதுக்கு தன்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார். எனினும் வருத்தம் தெரிவிக்கப்படவில்லை.
உங்கள் கட்சி பிரச்னையை ஹோட்டலில் கூடி கதையுங்கள்.
இவ்வாறு ஹோட்டல் மீட்டிங் தொடர்பான உண்மைகளை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கக்கி கொண்டிருக்கையில், எழுந்த எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன், உங்கள் கட்சி பிரச்சனைகளை ஏன் மாகாண சபையில் விவாதிக்கின்றீர்கள்? இங்கு உங்கள் பிரச்சனைகள் மட்டுமே கதைக்கப்படுவதால் சபை கேலிக்கூத்து போல் தென்படுகின்றது.
தொடர்ந்தும் இங்கு கட்சி பிரச்சனை தான் கதைபட போகின்றதா? நியதி சட்டங்கள் உருவாக்கப்படாமல் இவ்வாறு வீணான சண்டைகள் தான் நடைபெற போகின்றனவா? எம்மை நம்பி வாக்களித்த மக்களுக்கு உங்கள் சண்டைகள் தான் பரிசா? நீங்கள் உங்களுடைய கட்சி பிரச்சனைகளை உங்களுக்கு பிடித்த கோட்டலில் கூடி கதையுங்கள் என நாக்கை பிடுங்கும் வகையில் ஒரு போடு போட்டார் தவநாதன். இதன் போது இங்கு நானும் இருக்கன் என காண்பிக்கும் வகையில் உறுப்பினர் அகிலதாசும் சண்டை பிடிக்காதீங்க உறுப்பினர்களே என அடவைஸ் கூறினார்.
விசாரணைக்கு முன்னர் தீர்ப்பா??
அமைச்சர் ஐங்கரநேசன் மீது நாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தவறானது. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதை ரத்து செய்யும் அதிகாரம் எமக்கு ஒருவருக்கும் இல்லை.
அமைச்சர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் முழங்காவிலில் முதலமைச்சர் உரையாற்றியது தவறாகும். முதலமைச்சர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி ஆவர். குற்றம் சாட்டப்பட்ட நபரொருவர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னரே அவரை தீர்ப்பு கூற முடியுமா? என நீதிபதிக்கே சட்டம் கற்பித்தார் உறுப்பினர் பரஞ்சோதி.
என்னையா.. நடக்குது இங்க??
கடந்த அமர்வில் அமைச்சருக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்த முறை தவறு தான். மாகாண சபையின் தலைவர் எமது முதலமைச்சர் தான் அவர் தவிர வேறு யாரும் இங்கு தலைவர் இல்லை. இங்கு நடக்கும் குத்து வேட்டுக்களை பார்க்கும் மக்கள் படத்தில் வடிவேலு கேட்பது போல் என்னய்யா இங்க நடக்குது என நக்கலுடன் கேட்கிறார்கள்.என ஆதங்கப்பட்டார்.
அமைச்சர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் விசாரணை செய்யவேண்டும். அவர் குற்றவாளியா? நிரபராதியா? என்பது தொடர்பில் முதலமைச்சர் விசாரணை மேற்கொண்டு எமக்கு தெளிவு படுத்த வேண்டும். விசாரனை ஒன்று நடைபெற்று, குற்றமற்றவர் என நிரூபணமானால் அது எல்லோருக்கும் நல்லம் தானே என கூறிவைத்தார்.
சம்பந்தனுக்கும் அடி
1948 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாமையால் தான் இன்று வரை நாங்கள் தோற்றுக்கொண்டே உள்ளோம். வடக்கு மாகாண சபையில் நடைபெறும் இந்த சிறிய பிரச்சனைகளை தீர்க்க தெரியாத எமது கட்சி தலைமைகள் எவ்வாறு இந்த நாட்டின் இனப்பிரச்சனையை தீர்த்து எமக்கான தீர்வை பெற்று தர போகின்றது. என யதார்த்தத்தை கூறினார்.
எமது மக்கள் எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் துன்பப்பட்டுக்கொண்டு உள்ளார்கள். அரச அதிகரிகள் எங்களுக்கு மேலாக செயற்படுகின்றார்கள். இவ்வாறு எம்மை சுற்றி பல முறைகேடுகளும், கஷ்டங்களும் நடந்து கொண்டிருக்க நாங்கள் அவற்றை பற்றியெல்லாம் யோசிக்காமல் சண்டை பிடித்துகொண்டு உள்ளோம். என சிவாஜிலிங்கம் மீண்டும் உறுப்பினர்கள் மண்டையில் குட்டினார்.
முதலமைச்சர் விளக்கம்
நான் ஐந்து தடவை எழும்பி எழும்பி இருந்து விட்டேன் எல்லோரும் என்னை பேசவிடாமல் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள். ஆகையால் நான் பேசிய பின்பு நீங்கள் பேசுங்கள் என கூறிக்கொண்டே தனது விளக்கத்தை அளித்தார். நான் கொண்டுவந்த விடயம் சிறப்புரிமை சம்பந்தமானது. ஐங்கரநேசன் மீது கொண்டுவரப்பட்ட பிரேரணை முதலில் பிரேரனையாக் கொண்டுவரப்படவில்லை.
பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கொண்டு வரப்பட்டே பிரேரணையாக மாற்றப்பட்டது. தங்களிடம் சான்றுகள் இருப்பதாக சிலர் கூறுகின்றார்கள். அதனை முதலில் என்னிடம் தாருங்கள், அதன் பின்னர் விசாரணையை தொடரலாம். நீங்கள் என்னிடம் கேட்டவற்றுக்கு நான் அமைச்சர் ஐந்கரநேசனிடம் கேட்டு பதிலை தந்து விட்டேன். திட்டமிட்டு செய்தமையால் தான் அவைக்குறிப்பேட்டிலிருந்து நீக்குமாறு கோரினேன் என முதலமைச்சர் விளக்கமளித்தார்.
டைனோசர் அழிந்த கதை
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமியில் டைனோசர் எனும் பெரிய மிருகம் வாழ்ந்து வந்ததாம். அது தங்களுக்கிடையே சண்டை போட்டுக்கொண்டதாம். அவ்வாறு தான் அனைத்து பலம் பொருந்திய நாமும் எங்களுக்கிடையே சண்டை போட்டு அழிந்து போய்க்கொண்டு இருக்கின்றோம். ஆகவே சண்டைகளை விடுத்து மக்கள் சார்ந்து செயற்படுங்கள் என விளிப்பூட்டினார் உறுப்பினர் நடராஜ்.
சீதையின் இராமன் [இடையில் புகுந்த அனுமன்!]
இவ்வாறு உறுப்பினர்கள் தமக்கு தெரிந்த தந்திரக்கதை, சிறுகதை, வரலாற்று கதைகளை எடுத்து விட்டுக்கொண்டு இருக்கும் போது, அவைத்தலைவரும் தானும் ஒரு கதையை எடுத்து விட்டார், அவர் தந்து கதையை இவ்வாறு கூறினார், சீதை தீக்குளிக்க வேண்டுமென்றால் தீக்குளிக்க தான் வேண்டும். அதனை இராமன் பார்க்க வேண்டுமென்றால் பார்க்கத்தான் வேண்டும். இவற்றை கம்பன் எழுத வேண்டும் என்றால் எழுதத்தான் வேண்டும். என கதையை கூறி முடிக்க.
அப்போ இந்த கதையில் யார் அனுமன்? என சிவாஜி ஒரு போடு போட்டார், இதன் போது முந்தி அடித்துக்கொண்ட அமைச்சர் டெனிஸ்வரன் இங்கு நிறைய அனுமான்கள் இருக்கின்றனர் கூறி விட்டு சத்தமில்லாமல் சிரித்துவிட்டு இருந்தார். இதன் போது நான் அனுமன் இல்லை என அவைத்தலைவர் சிவஞானம் கூறி அனுமன் கரக்ரரில் இருந்து தப்பித்தார்.
வேற்றுமையில் ஒற்றுமை
இவ்வாறு சண்டைகளும், கதைகளும், நகைச்சுவைகளும், குத்தல் பேச்சுக்களும் தொடர்ந்து கொண்டிருக்க, இறுதியில் முதலமைச்சர் தான் கொண்டுவந்த விடயத்திலிருந்து கீழிறங்கி போக, முதலமைச்சரின் பெருந்தன்மையை, அவைத்தலைவர், பிரதி அவைத்தலைவர், உட்பட உறுப்பினர்கள் அனைவரும் பூரிப்புடன் கூறி கூறி மகிழ்ந்தனர். தனக்கு முன்னால் அனைவரும் புகழ்வதனை கேட்ட முதலமைச்சர் புன்னகைத்துக்கொண்டு இருந்தார்.
பின்னர் சபை முடிந்து அனைவரும் வெளியேறும் போது ஒருவரை ஒருவர் நெருங்கி அந்நியோன்னமாக கதைத்து சென்றதனை காண முடிந்தது. கூட்டத்தின் முடிவில் உறுப்பினர் ஒருவரை அணுகிய ஊடகவியலாளர்கள், என்ன சண்டை போட்டீர்கள் அதற்குள் ஒன்று சேர்ந்து விட்டீர்கள் என கேட்ட போது, இது அரசியல் என பதில் கூறி செல்ல ஊடகவியலாளர்களும் முழித்தபடி வெளியேறினர்.