காணாமல் போன உறவினர்களுக்கு ஜெனிவா செல்ல விசா மறுப்பு

காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜெனிவா செல்வதற்கு இலங்கை அரசு விசாவினை மறுத்துள்ளது.

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்திவரும் காணாமல் போனவர்கள் 39ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே ஐக்கியநாடுகள் சபையில் கேட்டிருந்தோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்டிருந்தோம். 

எங்களுக்கு நியாய மான தீர்வு பெற்றுத்தரவேண்டும் என்று கோரியுள்ளோம் இந்நிலையில் ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் நாங்கள் கலந்து சாட்சியமளிக்க முடிய வில்லை இலங்கை அரசினால் விசா மறுக்க ப்பட்டுள்ளது. 

இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எட்டு மாவட்ட உறவுகளுக்கும் மிகவும் மன அழுத்தத்தினை கொடுத்துள்ளது பயத்தினை கொடுத்துள்ளது  குற்றம் புரிந்த இராணுவத்தி ற்கு விசா கொடுத்து அவர்களை அனுப்பி எங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது மிகவும் வேதனைக்குரிய விடயம் காணாமல் போன வர்கள் அலுவலகம் நீண்டகாலமாக வேண் டாம் என்றே சொல்லி வருகின்றோம். 

வெளி நாட்டு நிறுவனங்களும் காணாமல் போன வர்களின் அலுவலகத்தினை திணித்துக் கொள்கின்றார்கள். இதனால் கிடைக்கும் எந்த தீர்வும் எமக்கு வேண்டாம். இதனை நாங்கள் புறக்கணிக்கின்றோம்.

ஆயிரக்கணக்கானவர்கள் இணைந்து போராடிவரும் இந்த வேளையில் அரசும் அரசு சார்ந்தவர்களும் அவர்கள் சொல்வதைத் தான் நாங்கள் கேட்கவேண்டும் நாங்கள் சிறுபான்மையான மக்கள் என்ற நிலைப்பாட் டில் அவர்களின் கருத்துக்கள் செல்கின்றது.

எங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் எங்களின் உறவினை மீட்க சர்வதேசம் உதவவேண்டும்.

இலங்கை அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்திற்கு சர்வதேசம் துணைபோகாமல் எங்களுக்கு ஆதரவினை தந்து நீதியினை பெற்றுக் கொடுக்கவேண்டும்.

வெளிநாடுகளில் வாழ்கின்ற எங்கள் சமூ கத்தினை நாங்கள் கேட்கின்றோம். எங்கள் உறவுகளை மீட்க நீதி கிடைக்க புலம்பெயர் தமிழர்கள் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவேண்டும் எங்கள் நிலையினை உலகிற்கு தெரிவிக்கவேண்டும் என்று உங் களிடம் நாங்கள் கையேந்தி நிற்கின்றோம். 

விசாமறுப்பு தெரிவித்த மனவேதனை யில் நாங்கள் இருக்கின்றோம். எங்கள் நியாயம் கேட்பதற்கு எந்த நாட்டிற்கு செல்வதற்கும் எங்களுக்கான ஒரு சூழலை அமைத்து தர வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.

எங்களுக்கு இலங்கை அரசின் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் ஆறாயிரம் ரூபா மாத கொடுப்பனவு வேண்டாம். 

அவர்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித் துள்ள கருத்து உண்மைக்கு புறம்;பானது இந்த அலுவலகத்தினை நாங்கள் முழுமை யாக புறக்கணிக்கின்றோம். இந்த அலுவலக த்தால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என் பதை இந்த இடத்தில் சுட்டி நிற்கின்றோம் என் றும் காணாமல் போனவர்களின் உறவி னர்க ளின் சங்க தலைவி தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila