ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் ஊனா மெக்கோலி தலைமையிலான குழுவினர் இன்று கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் நீர் உள்ளிட்ட இயற்கை வளங்களை பயன்படுத்துகின்றனர். தெற்கிலிருந்து பிரசித்தமாகவே மீனவர்களை அழைத்து வருவதுடன் அந்த மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியிலும் ஈடுபடுகின்றனர். வடக்கு மீனவ சமுதாயத்தினர் அச்சப்படுவதற்கு இது பிரதான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதாரண நடைமுறைகளை மீறிய விதத்தில், காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லிம்களுக்காக வீதிகளும் வீடுகளும் அமைக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
வடக்கு மக்களின் வளங்களை அபகரிக்கும் இராணுவம்! - ஐ.நா தூதுவரிடம் முதலமைச்சர் முறைப்பாடு
Related Post:
Add Comments