தனக்குப் பணி இடமாற்றம் வழங்கப்பட வில்லை என்ற காரணத்தால் இளம் அரச உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இடமாற்றம் வழங்காததன் காரணமாக எத் தனையோ அரசு ஊழியர்கள் மனஉளைச் சலுக்கு ஆளாகி இருக்கின்றனர் என்பது மறு தலிக்க முடியாத உண்மை.
செல்வாக்குக் கலாசாரமே மேலோங்கி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் ஒருபகுதியி னர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.
இவ்வாறு நேர்மையாகவும் அரச சுற்றுநிரூ பங்கள் மற்றும் இடமாற்றக் கொள்கைகளு க்கு மதிப்பளித்தும் அதன்படி நடக்க வேண்டும் என்று நினைக்கின்ற அரச உத்தியோகத்தர் கள் எதிர்நோக்குகின்ற கஷ்ட துன்பங்கள் சொல்லுந்தரமன்று.
இத்தகையவர்கள் குறுக்குவழி தெரியாத வர்கள். ஏதோ எல்லாம் சட்டப்படி நடந்தாகும் என்பது அவர்களின் நினைப்பு.
ஆனால் இவை எதுவும் அரச சேவையில் பொருந்தாது என்பதே உண்மை. யாரிடம் செல் வாக்கு இருக்கிறதோ; பணபலம் இருக்கி றதோ; பந்தம் பிடிக்கத் தெரிகிறதோ; பணி விடை செய்ய முடிகிறதோ அவர்கள் சர்வசாதா ரணமாக தங்களின் காரியத்தை கனகச்சித மாகச் செய்து முடிக்கின்றனர்.
ஆனால் இவற்றைச் செய்வதற்கு நேர்மை யாக, கடமை உணர்வுமிக்க, கள்ளம் கபடமற்ற, மனச்சாட்சியுள்ள எவராலும் முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
இவ்வாறு நேர்மையைக் கடைப்பிடிக்கின்ற நல்ல உள்ளங்கள் மற்றவர்களை அதட்டவும் முடியாதவர்கள்.
இதனால் நடக்கின்ற அத்தனை அநியாயங் களையும் கண்டு தங்களுக்குள் வருந்தி வேத னைப்பட்டு தங்களை அழிப்பதன் மூலமே தங் களுக்கு விடுதலையும் மற்றவர்களுக்குத் திருத்தமும் என்ற மிகத் தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இத்தகைய மனமுடையவர்களை பொறுத்த வரை அநீதியும் அக்கிரமும் நிறைந்த இந்த உலகம் கொடிய மிருகங்கள் வாழும் காட்டி லும் கொடூரமானதாகவே காட்சி கொடுக்கிறது.
இதன் காரணமாக தங்களை அழித்து தங் கள் குடும்பத்துக்கு இழப்பை ஏற்படுத்துவது மட்டுமே நடந்தாகின்றது.
இவ்வாறான தற்கொலைகள் எங்கள் சமூ கத்தை திருத்தும் என்று நினைத்தால் அது வெறும் பிரமையே அன்றி வேறில்லை.
தவிர, எங்கள் பல்கலைக்கழகக் கல்வியும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடைய பிரச் சினையை எதிர்கொள்கின்ற தற்துணிவை வழங்கவில்லை என்பதையும் குறிப்பிட்டுத் தானாக வேண்டும்.
எனவே இது விடயங்களில் அரச அதிகாரி களும் பல்கலைக்கழக புத்திஜீவிகளும் ஒருக் காலேனும் கூடி இருந்து தற்கொலைச் சம்ப வங்களைத் தடுப்பது எப்படி என்பது பற்றி ஆராய்வது புண்ணிய செயலாகும்.