
நேற்றைய தினம் குறித்த பகுதியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில், பருத்தித்துறை பொலிஸார் நிகழ்வு ஏற்பாட்டில் இருந்த மக்களை அச்சுறுத்தி அங்கிருந்து மக்களை விரட்டியடித்தனர்.
பதற்றமான சூழலில் பொலிஸாரின் அச்சுறுத்தலையும் தாண்டி குறித்த நேரத்தில் இப்பகுதியில் சுடரேற்றி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வை முன்னின்று நடத்தியவரின் வீடு நள்ளிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக சம்பவம் இடம்பெற்ற நேரம் குறித்த நபர் அயலில் உள்ள தனது தாயாரின் வீட்டில் இருந்துள்ளார்.
இதேவேளை, கடந்த திங்கட்கிழமை குறித்த நபரின் வீட்டுக்கு சென்ற ஒருசிலர் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்தகூடாது என அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.