![]()
திருகோணமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை சிறியளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.5 இற்கும் 3.8 இற்கும் இடைப்பட்டதாக பதிவாகியுள்ளது என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.
|
இன்று அதிகாலை 12.35 இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் பொதுமக்களுக்கோ, சொத்துக்களுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என சந்திரவிமல் சிறிவர்தன கூறினார்.
|
நள்ளிரவில் அதிர்ந்தது திருகோணமலை!
Related Post:
Add Comments