தமிழர் தேசத்தின் அபிவிருத்தியை இராணுவத்தினர் தீர்மானிக்க முடியாது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

தமிழர் தேசத்தின் அபி விருத்தியை இலங்கை இரா ணுவத்தினர் தீர்மானிக்க முடியாது என தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

பூநகரியின் நெற்பிலவுப் பகுதியின் நாரந்தாழ்வு வீதி யின் புனரமைப்பில் இராணு வத் தலையீடு இருப்பது  குறித்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்து அந்த வீதி மக்களுடனான சந்திப்பின்போதே பாராளு மன்ற உறுப்பினர் மேற் கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழர்கள் இந்த மண் ணிலே தங்களைத் தாங் களே ஆள விரும்புகிறார்கள். அதற்காகத்தான் நாம் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றோம். 
எங்களுடைய தேசம் எவ்வாறு அபிவிருத்தி செய் யப்பட வேண்டும் என்பதை எமது மக்களும் அவர்க ளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுமே தீர்மா னிக்க வேண்டும், இராணு வத்தினர் அல்ல.

எமது மண்ணிலே எமது மக்களின் சனத்தொகைக்கு நிகராக இராணுவம் நிலை கொண்டிருக்;கிறது. 
எமது மக்களுக்கு சொந்த மான பல காணிகளை பல வந்தமாக கைப்பற்றி வைத் திருக்கிற இராணுவம் எமது மக்களிற்கு வருமானம் ஈட்டித் தரக்கூடிய பல காணி களை அடாத்தாக கைப்பற்றி அதனுடைய வளங்களை தாம் சுரண்டி அதன் வரு மானத்தை அனுபவித்து வருகின்றது.

இராணுவத்தினரிடம் சரணடைந்த எமது உறவு கள் பற்றியும் அவர்களுக்கு என்ன நடந்தது என  அரசி டமும் இராணுவத்தினரிட மும் நாம் கோரி நிற்க இராணுவத்தினர் எமது ஆலயத்தில்  வந்து தேர் இழுப்பது, மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது போன்ற பணிகளை செய்வதோடு அவற்றிற்கு நல்லிணக்கம் என்ற பெயரினை சூட்டி யுத் தக்குற்றம், போர் விசா ரணை, பொறுப்புக்கூறல் போன்றவற்றிலிருந்து தப் பிக்க முயல்கிறது. 

உண்மையாக இந்த மண்ணிலே நல்லிணக்கம் மலர வேண்டுமாக இருந் தால் எமது மக்களுக்கு சொந்தமான காணிகளை அவர்களிடமே மீளக்கை யளித்து  எமது மக்களின் வளங்களின் வருமான த்தை எமது மக்களே அனுபவிக்க வைப்பதனூடா கவே முடியும்.
அதைவிடுத்து எமது கிராமங்களில் தேர் இழுப்ப தனூடாகவோ வீதிகளை போடுவதனூடாகவோ இரா ணுவத்தினரால் நல்லிணக் கத்தினை ஏற்படுத்த முடி யாது. 
எமது மண்ணுடைய அபிவிருத்திகளை மேற் கொள்வதற்கு எமது மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை, பிரதேச சபைகள்  போன்றவற்றினூ டாக எமது தேசத்தின் அபி விருத்தியை நாம் முன் னெடுப்போம் என பாராளு மன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila