மருத்துவர் என்றால் வெளிநாடு; தாதிய சேவை என்றால் வேண்டாம்

மல்வானையில் இருந்து ரம்புட்டான் பழத்தை கொள்வனவு செய்து அதனை ஒரு வடிவாக னத்தில் ஏற்றிவந்து திருநெல்வேலிச் சந்தை அமைந்துள்ள ஆடியபாதம் வீதியின் ஓரமாக அதனை நிறுத்தி விட்டு,

ரம்புட்டான்... ரம்புட்டான்... என்று கூவி அழைத்து அவற்றை விற்பனை செய்வதும் ஒரு சோற்றுப் பார்சலை எடுத்து அதனை வாகனத்துக்குள் இருந்தபடி மூன்று பேர் சேர்ந்து உண்டுவிட்டு, மீண்டும் அடுத்ததடவைக் காக மல்வானை நோக்கிச் செல்கின்ற சிங்கள உழைப்பாளர்களைக் கண்டு அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்ல; கட்டில்,  கண்ணாடி, கதிரை என்பவற்றை சேர்த்து தடியில் கட்டி அதனைத் தோளில் சுமந்தபடி மூலைமுடுக்கெல்லாம் சென்று விற்பனை செய்கின்ற அதே சிங்கள முயற்சியாளர்களின் விற்பனை மூலோபாயம் குறித்தும்,

முஸ்லிம் வர்த்தகர்கள் வடபுலத்தின் தெரு வோரத்தை தற்காலிக வியாபார நிலையமாக மாற்றி, துணி வகைகளையும் மின்சார உப கரணங்களையும் விற்பனை செய்கின்ற நுட் பத்தையும் பார்த்து வியக்காமல் இருக்க முடியாது.

இதை நாம் கூறும்போது இது கண்டெல் லாம் தாங்கள் வியப்பீர்களா? என்று நீங்கள் கேட்டால், வேலைவாய்ப்பு இல்லை என்று கூறி  விட்டு, ஐந்து ஆறு இலட்சம் ரூபாய் பெறுமதி யான மோட்டார் சைக்கிளில் ஓடித் திரிகின்ற எங்கள் இளைஞர்களைப் பார்க்கும்போது மேற்கூறிய விடயம் வியப்புக்குரியது என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள்.

வேலைவாய்ப்பு இல்லை; மூலதனம் இல்லை என்று கூறுகின்ற இளைஞர்களுக்கு தாங்கள் ஓடித் திரிகின்ற மோட்டார் சைக்கிளுக்குக் கொடுத்த காசுதான் ஒரு பெரும் மூலதனம் என்பது தெரியாமல் இருக்கிறது.

சரி இதுதான் என்றால் இல்லை, எங்கள் மண்ணில் படித்து மருத்துவப் பட்டம் பெற்ற இளம் மருத்துவர்கள் (எல்லோரையும் குறிப் பிடவில்லை) வெளிநாடு செல்வதையே தம் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். தாய் மண் ணில் படித்துப் பெற்ற பட்டத்துக்காக நன்றி செலுத்த வேண்டும் எனக் கருதி தம் தமிழ் உறவுகளுக்குச் சேவையாற்ற நினைக்காத தன்மை ஒரு புறமும்,

தாதிய சேவைக்கு விண்ணப்பம் கோரப் பட்டுள்ளது என்றால்,  அது எங்களுக்கு வேண் டாம் என்று தவிர்த்து விடுகின்ற நிலைமையும் எங்களிடம் இருக்கிறது என்றால்,
எங்கள் தமிழ்ப் பரம்பரையின் எதிர்காலம் எப்படியாகும் என்பதை நாங்கள்தான் மீட்டுப் பார்க்க வேண்டும்.

கூடவே, சிங்கள மற்றும் முஸ்லிம் இளை ஞர்கள் தங்கள் சொந்த ஊர் கடந்து வட மாகாணத்துக்கு வந்து மக்களின் தேவை அறிந்து வர்த்தக முயற்சிகளைச் சிறப்பாக முன்னெடுக்கின்ற அதேவேளை,
எங்கள் இளைஞர்கள் வாள்கொண்டு வீடு புகுந்து ஆட்களை வெட்டுவதும் உடைமைகளை சேதமாக்குவதிலும் ஈடுபடுகின்றனர் என்றால், எம் இனத்தை யார்தான் காப்பாற்றுவது. 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila