மன்னார் புதைகுழி:முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியா?

மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் தோண்டப்படும் மனித புதைகுழி பத்துவருடங்களிற்கும் குறைவானதாக இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.சுயாதீன கண்காணிப்பாளர்களின் தகவல் பிரகாரம்  இறுதி யுத்தத்தில் சரணடைந்த அல்லது பிடிக்கப்பட்ட தமிழ் மக்களினது அதுவாக இருக்கலாமென சந்தேகம் வலுத்துவருகின்றது.
இதனிடையே புதைகுழி எவ்வளவு தூரம் நீண்டு செல்லும் என்பதைத் தன்னால் கூற முடியாது என தோண்டும் பணிகளை முன்னெடுத்து செல்லும் சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு சட்ட மருத்துவ நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் மனித எலும்பு கூடுகளை மீட்கும் பணி நடந்து வருகிறது.
களனி பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் தடயவியல் ஆய்வுகளுக்கான மூத்த பேராசிரியர் ராஜ் சோம தேவாவுடன் அவரின் குழுவினரும் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அகழ்வுப் பணிகளைத் துரிதப்படுத்த மேலதிகமாக உத்தியோகஸ்தர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்படும் எலும்பு கூடுகளின் புகைப்படங்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களைக் கூற முடியும்.
இதன் தலைமை விசாரணையாளராக, நானே இறுதி அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்ய வேண்டும்.
”எலும்புக் கூடுகளை மீட்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம். இதில் முக்கியமான பகுதிகளை அடையாளப்படுத்தி சேகரித்து வருகிறோம். இவற்றை மிகவும் வெளிப்படையாக செய்து வருகிறோம். நீதிமன்ற நீதவான் முன்னிலையில்தான் இந்தப் பணி நடக்கிறது.நீதிபதியும் குறிப்பெடுத்து வருகிறார். மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்படுகின்றன.
இரண்டாம் கட்டமாகவே, ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.தோண்டும் பணிகள் நிறைவடைந்த பின்னரே இதுகுறித்த ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன”.
இவற்றை சோதனை செய்ய நீண்ட நாட்கள் தேவைப்படும். அதில் ஒருசில சோதனைகளை இப்போதே ஆரம்பிக்க யோசித்துள்ளோம். இதில் ஒரு பரிசோதனையை வெளிநாட்டில் செய்ய உத்தேசித்துள்ளோம்.
அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட, நிபுணத்துவம்வாய்ந்த நிறுவனமொன்றில் இதனை நடத்த யோசித்தோம்.
இந்த யோசனையை நீதிமன்றத்தில் முன்வைத்தோம். இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் மாதிரிகளை புளோரிடாவிற்கு அனுப்பிவைப்போம்.
மக்களின் சம்பிரதாயபூர்வ, மத அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யும்போது அதில் ஒரு ஒழுங்குமுறை இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக ஒருபோதும் உடல்கள் புதைக்கப்படுவதில்லை. ஆனால் இந்த இடத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. புகைப்படங்களில் இவற்றை உங்களால் அவதானிக்க முடியும்.”
”மயான பூமியில் உடல்கள் புதைக்கப்படுவதைப் போன்ற அமைப்பிலும் ஒரு இடம் இருக்கிறது. ஒழுங்கற்ற முறையில், ஒன்றன் மேல் ஒன்றாக புதைக்கப்பட்ட எலும்பு கூடுகள் இருப்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பகுதி குறித்தே அதிக கவனம் செலுத்துகிறோம்.”
இந்த புதைகுழியின் ஒரு எல்லையை மட்டுமே அடையாளம் கண்டுள்ளோம். இது எவ்வளவு தூரம் விரிந்துள்ளது என்பதை எம்மால் இன்னும் கண்டறிய முடியவில்லை.
தோண்டும் பணிகள் மட்டுமே தற்போது முன்னெடுக்கப்படுகிறன. மிகவும் கவனமாக இந்தப் பணியை செய்கிறோம்.
சில நேரம் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு எலும்புக்கூடுகளை மட்டுமே எடுக்கக் கூடியதாக இருக்கிறது.”
”காரணம், இவற்றை சிறுசிறு துண்டுகளாக சேகரிக்க வேண்டியிருக்கிறது. இவற்றை விஞ்ஞானபூர்வமாகவே செய்துவருகிறோம். இன்னும் நிறைய எலும்புக் கூடுகள் தோண்டியெடுக்க வேண்டியுள்ளது.
எவ்வளவு தூரம் இது நீண்டு செல்கிறது என்பது எனக்கே தெரியாது. எனவே, தோண்டும் பணிகள் எப்போது நிறைவுக்கு வரும் என்பதைக் கூற முடியாது.
முதலில் தோண்டும் பணிகள் நிறைவடைய வேண்டும். அதன்பின்னரே ஆய்வுகளையும், சோதனைகளையும் நடத்தி இறுதி முடிவுக்கு வர முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila