வடக்கு, கிழக்கில் இன்னும் 20 சதவீத காணிகள் மட்டுமே இராணுவத்தினர் வசம் உள்ளதாகவும், அந்தக் காணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், திருவண்ணாமலை சாய்பாபா ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டார்.
இதன்போது, சாய் பாபா புகைப்படத்துடன் கூடிய 100 தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
அதன்பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.