எதிர்வரும் 24ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தன் எதிர்கால அரசியல் நிலைப்பாட் டைப் பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஈழம் என்ற எல்லை கடந்து உலகம் முழுவதிலும் வாழுகின்ற ஈழத் தமிழ் மக்களையும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் அக் கறை கொண்ட தமிழர்களிடமும் பலத்த எதிர் பார்ப்பையும் ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.
இம்மாதம் 25ஆம் திகதியுடன் வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகிறது.
இதற்கு முன்பாக எதிர்வரும் 23ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் சம்பிரதாயபூர்வ மான அமர்வு நடைபெறும்.
அன்றைய நாள் முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் என்று அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் பிறந்தநாளில் சம்பிரதாயபூர்வமான அவை அமர்வு நடந்து முடிய,
மறுநாள் 24ஆம் திகதி அதாவது வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் முடிவுறுவ தற்கு முதல் நாள், முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்கள் தமிழ் மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
இந்த அறிவிப்பு அவரின் எதிர்கால அரசி யல் தொடர்பானது எனத் தமிழ் மக்கள் பேரவை தனது செய்திக் குறிப்பில் பதிவு செய்துள்ளது.
தவிர, தமிழர்களின் அபிலாசைகளை வென் றெடுப்பது தொடர்பில் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ஆதரவைத் திரட்டுவதும் இது விடயத் தில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றித் தீர்மானிப்பதற்குமாக,
எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மாபெரும் கூட்டமொன்றுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர னின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியின் துளைப்போடு காத்திருந்த இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இப்போது முதலமைச்சரின் அறிவிப்பை நோக்கிக் காத் திருக்கத் தயாராகி விட்டனர்.
இதற்காக நல்லூர் முருகன் ஆலயத்தின் வடக்கு வீதியில்; தியாகி திலீபன் உண்ணா விரதம் இருந்த வரலாற்றுப் பெருமை மிக்க மண்ணில்; தமிழ் மன்னன் சங்கிலியன் அரண்மனை அமைத்து ஆட்சி செய்த நல்லூர் இராசதானியில் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூடுவர் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு தமிழர் தாயகம் முழுவதிலும் இருந்து தமிழ் மக்கள் கூடுவது தனித்து முதல மைச்சர் விக்னேஸ்வரனின் அறிவிப்பை கேட் பதற்காக மட்டுமல்ல,
மாறாக நீதியரசர் விக்னேஸ்வரன் அவர் களுக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் பக்கபல மாகவும் பாதுகாப்புக் கேடயமாகவும் இருக்கிறோம்.
நீங்கள் நேர்மையின் வழியில் ஜனநாய கத்தின் துணைகொண்டு அகிம்சையையும் ஆத்மிகத்தையும் படைக்கலமாக்கி சர்வதேசத் தின் துணையோடு எங்களின் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மக்கள் அங்கு கூடுவர் என்பது இங்கு குறித்துரைக்கக்கூடிய விடயமாகும்.