வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் கடற்படை பாதுகாப்பில்?

வடமராட்சி கிழக்கில் இருந்து மருதங்கேணி பிரதேச செயலகத்தால் வெளியேற்றப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் சாலைப் பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தினை அண்டிய பகுதிகளில் வாடி அமைத்து மீண்டும் தொழிலிலில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.தமிழ் மீனவ்hகளின் படகுகள கடந்த காலத்தில் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில் பிற மாவட்ட மீனவர்கள் மட்டும் அப்பகுதியில் ஏற்கனவே தொழில் புரிந்து வந்திருந்தனர். இந்த நிலையிலேயே தற்போது மருதங்கேணி பிரதேச செயலகத்தினால் வெளியேற்றப்பட்ட மீனவர்களும் அப்பகுதியில் குவிந்துவருவதாக தெரியவருகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் வடமராட்சி கிழக்கில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைப் பரப்பிற்குள் உள்ள அரச நிலத்தில் பிரதேச செயலாளரின் அனுமதி இன்றி வாடி அமைத்துத் தொழில் புரிந்த பிறமாவட்ட மீனவர்களிற்கு எதிராக அரச நிலத்தில் அத்துமீறிக் குடியேறியதற்கான வழக்கினை மருதங்கேணிப் பிரதேச செயலாளர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதன் பிரகாரம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் அரச காணியில் அத்துமீறி வாடி அமைத்து கடல் அட்டை பிடிப்பில் ஈடுபட்டு வந்த 8 நிறுவனங்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் கடந்த 25ம் திகதி பிறப்பித்த கட்டளைப்படி அப் பகுதியில் இருந்த வாடிகளை அதன் உரிமையாளர்களினால் பிடிங்கி அகற்றப்பட்டது.

இதன் பிரகாரம் மருதங்கேணி , தாளையடிப் பகுதிகளில் இருந்து வெளியேறிய 8 நிறுவனங்களிற்கும் சொந்தமான 32 வாடிகளில் அமைத்து தொழில் புரிந்தவர்களே அங்கிருந்து வாடிகளை அகற்றி வெளியேறினர். இவ்வாறு அங்கிருந்த சுமார் 850ற்கும் மேற்பட்ட பிற மாவட்ட மீனவர்கள் வெளியேறும் நிலையில் குறித்த நிறுவனங்களிற்கு முல்லைத்தீவு சாலைப் பகுதியிலும் கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதி உண்டு. இதனால் வடமராட்சியில் இருந்து வெளியேறிய பிற மாவட்ட மீனவர்கள் தற்போது சாலைப் பகுதியில் வாடிகளை அமைத்துவருகின்றமை அம்பலமாகியுள்ளது.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila