
சிங்கள பிரதேசங்களில் யாழ்.பல்கலைக்கழக சக இன மாணவிகள் பேரணியின் நோக்கம் பற்றி ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து கொண்டு முன்னே செல்ல பின்னராக மாணவர்கள் நடைபயணி தொடர்கின்றது.மாணவர்களுடன் அரசியல் கட்சிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களும் இணைந்துள்ளன.
இதனிடையே ஒருபுறம் மதவாச்சியில் அடை மழை பொழிந்து கொண்டிருக்க அதன் மத்தியிலும் மாணவர்களது நடைபயணம் தொடர்கின்றது.இன்னொரு புறம் மாணவர்களில் பலரும் கால்ப்புண்களால் பாதிக்கப்பட்டுள்ள போதும் அதனையும் பொருட்படுத்தாது நடைபயணியில் தொடர்கின்றனர்.
நாளை அனுராதபுரம் சிறையினை சென்றடையும் மாணவர்களது நடைபயணத்தில் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கைதிகளது விடுதலைக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகளும் இணையவுள்ளனர்.
அனைவரும் ஒன்றிணைந்து போராட்டகாரர்களை சந்தித்ததன் பின்னர் உண்ணாவிரத போராட்டத்தை தாம் பொறுப்பேற்தாக தெரிவித்து முடிவுறுத்த அரசியல் கைதிகளிடம் கோரவுள்ளதாக தெரியவருகின்றது.