2.1 மில்லியன் ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேநபருடன் இணைந்து குறித்த வியாபாரி நீண்ட காலமாக இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தனக்கு தர வேண்டிய 2.1 மில்லியன் ரூபா பணத்தை மிக நீண்ட காலமாக குறித்த பிரித்தானிய பிரஜை வழங்கவில்லை என வியாபாரி முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதி மன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.