![]()
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அரசியல் உள்நோக்கத்தோடு செயற்படுவதாக, கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 133ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
|
இதன்போது, மாகாண நீர்க் கொள்கை தொடர்பிலான விவாதத்தின் போது, விவசாய அமைச்சர் க.சிவநேசன், மாகாண விவசாய அமைச்சு முன்வைத்த நீர்க் கொள்கைக்கு என்ன நடந்தது என்று, அவைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த அவைத் தலைவர் சிவஞானம், மாகாணத்துக்கு எத்தனை அமைச்சர், எத்தனை நீர்க் கொள்கைகளை முன்வைப்பீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.
இதன் போது குறுக்கிட்ட கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், அமைச்சர்கள் எத்தனை கொள்கையையும் கொண்டு வரலாமெனத் தெரிவித்தார்.மேலும், அமைச்சு கொண்டு வந்த கொள்கைக்கு என்ன நடந்தது. ஏன் அதனைக் கொடுக்கவில்லை என்று அவைத் தலைவரிடம் கேள்வியெழுப்பினார். அத்துடன், அவைத் தலைவர் அரசியல் உள்ளார்ந்த நோக்கத்தோடு செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
|
உள்நோக்கத்துடன் செயற்படுகிறார் அவைத்தலைவர்! - அமைச்சர் சர்வேஸ்வரன் குற்றச்சாட்டு
Add Comments