
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்தலை விடுத்தார்.
அதிகார மாற்றம் இலங்கையில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் இதன்மூலம் வன்முறைகளை தடுக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.