இந்த வெற்றியை அமைதி கொண்டாடுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியொன்றை பதிவு செய்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் நிர்வாகத் திறமைகளை ஜனாதிபதி நம்பியே இந்த சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளார்.
கடந்த தடவை ஏனையவர்கள் வெற்றியைக் கொண்டாடியது போல் மக்கள் இந்த வெற்றியை கொண்டாட வேண்டாம்.
மிகவும் அஹிம்சை ரீதியான அடிப்படையில் இந்த வெற்றியை மக்கள் கொண்டாட வேண்டும்.
இதேவேளை, வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீள் கட்டியெழுப்பவும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளை முறியடிக்கவும் நாம் பகல் இரவு பாராது அயராது உழைப்போம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Add Comments