
மஹிந்தவின் பதவியேற்பு தொடர்பான தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியானதும், கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் பாரிய மக்கள் கூட்டம் ஏற்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், தொண்டர்கள் என பலரும் அந்த இடத்தில் குவிந்துள்ளனர்.
பரபரப்பான சூழ்நிலையில் நாளைய தினம் அமைச்சரவையில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியை மிகவும் சமாதானமாக கொண்டாடுமாறும் எவருக்கும் பாதிப்பு ஏற்பட கூடாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்து கொண்டமையை அடுத்து, நாட்டின் பல பாகங்களிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் சோகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.