சபாநாயகர் தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்! (2ஆம் இணைப்பு)
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக குழப்பத்திற்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கும் வகையில் இவ்விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சபாநாயகர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்!
நாடாளுமன்றம் இன்று பிற்பகல் கூடவுள்ள நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தில் முற்பகல் 11.30 மணியளவில் இவ்விசேட கூட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சபாநாயகருடனான விசேட கூட்டம் சற்று நேரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நிலவிய குழப்பநிலையை தொடர்ந்து, நாடாளுமன்றம் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தொடர்ந்து நாடாளுமன்றை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கும் வகையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.