கடந்த 13ம் திகதியன்;று கொக்குத்தொடுவாய் மத்தி நாயடிச்ச முறிப்பு வயல்வெளியில் விவசாயத்தில் ஈடுபட்டுவந்தவரான 42 வயதுடைய கனகையா உதயகுமார் என்பரே உயிரிழந்துள்ளார்.அவர் தனது வயல் காவலலுக்காக சென்றிருந்த நிலையில் நேற்று இரவு வரை வீடு திரும்பியிருக்கவில்லை.
இந்நிலையில் உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டதுடன் முல்லைத்தீவு காவல் நிலைத்திற்கு சென்று முறைப்பாடும் செய்துள்ளனர்.
இன்னிலையில் பிரதேச மக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தேடியும் கண:பிடிப்படாத நிலையில் இலங்கைப்படையினரின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
அப்போதே சிங்கள குடியேற்ற வாசிகளால் அமைக்கப்பட்டடிருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள குடியேற்ற வாசிகளான சிங்களவர்கள்; குறித்த வயல் காணிப்பகுதியில் சட்டவிரோதமாக கம்பியில் மின்சாரம் பாய்ச்சியுள்ளனர்.அதில் சிக்குண்டே கனகையா உதயகுமார் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
