
கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போதே தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவன் கூல் தனக்கான வரம்புகளை மீறி கட்சி சார்ந்து செயற்படுவதாக பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது. குறிப்பாக வடக்கில் தமிழ்த் தேசிய முன்னணிக்கு எதிராக தான் ஒரு நடுநிலையான தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்பதையும் மறந்து ரட்ணஜீவன் கூல் மிக மோசமான முறையில் நடந்துகொண்டார்.
தமிழரசுக்கட்சியின் உறுப்பினரான சுமந்திரனுடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்ச்சியாக அமபலப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று தேர்தல்கள் தொடர்பான அவணம் ஒன்றில் சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான மகிந்த தேசப்பிரியவும் நளின் அபயசேகரவும் கையெழுத்திட்டுள்ளபோதிலும் ஆணைக்குழுவின் மூன்றாவது உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அதில் கையெழுத்திட மறுத்துள்ளார்.
இதன் தொடர்ச்சியா தமிழரசுகட்சியினூடாக சுமந்திரனைக் கொண்டு ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சியிலும் அவர் கடுமையாக ஈடுபட்டிருந்தார். இன்று தமிழரசுக்கட்சியினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்கினை தானே நெறிப்படுத்துவதாக இவர் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துமுள்ளார்.
இதன் மூலம் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது ரட்ணஜீவன் கூலினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு விடுக்கப்பட்டடுவந்த கோரிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.