
அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்து பேசிய அவர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனநாயக மீறல்கள் காரணமாக நாட்டு மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
வடக்கு மக்களும், அரசியலில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் நாங்களும் இதனால் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்.
இந்த நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதில் இருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை.
ஜனநாயகத்திற்கு முரணான சதித்திட்டங்களை நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பது தொடர்பாக எமக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த இரண்டு கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள மகிந்த - ரணில் தரப்பு மிகவும் தீவிரம் காட்டி வருகின்றது. ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மகிந்த தரப்பை ஆதரிக்க போவதில்லை என கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும், இன்று சந்தித்து பேசியுள்ளமை மைத்திரி - மகிந்தவுக்கு பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.