வடக்கு கிழக்கை கூறு போட்டவர்களுடன் ஜனநாயகம் பேசிய சம்பந்தன்

இணைந்திருந்த வடக்குக் கிழக்கை கூறுபோட்டு இரண்டாகப் பிரித்து கொண்டாடிய ஜே.வி.பியுடன் இணைந்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இன்று (5) எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் ​அநுரகுமார திசாநாயக்கவை சம்பந்தன் சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னராக  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சம்பந்தன், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் அரசியல் சாசனம் பின்பற்றப்பட வேண்டும் , அரசமைப்பை மீறி எந்தச் செயல்களிலும் ஈடுபட முடியாது. அண்மையில் இடம்பெற்ற விடயங்கள்  அரசமைப்பைக்கு மாறானவை என தெரிவித்தார்.                                                                                                                                                                             

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

பதவி நீக்கம், புதிய பதவி நியமனம் இவையெல்லாம் அரசமைப்பு முரணான் செயற்பாடுகள் என்றார்.

இந்த செயல்கள் ஜனநாயகத்தின் இறையாண்மையை இல்லாமல் செய்கின்றது. இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இயன்ற​வரை இவற்றைத் தடுப்பது எமது கடமை . எம் மக்கள் சார்பாக நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதிலிருந்து நாம் தவறமாட்டோம். நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கொடுத்து வாங்கப்படுகின்றனர். இவ்விதமானச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் செயல்கள் தீவிரமடைந்தால் இந்த  நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்பதே எமது நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila