
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக நீண்டகாலம் பதவி வகித்துள்ள பியசேன கமகே, ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் இன்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக நாட்டில் உள்ள சகல அரச நிறுவனங்களும் செயலிழந்து போயுள்ளன.
நாடாளுமன்ற சம்பிரதாயம், அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாதவர்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அதிகாரத்தை வழங்கினார்.
அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மேற்கொண்ட இந்த நடவடிக்கையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தேன் எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கவே பதவி, சிறப்புரிமைகளை கைவிட்டு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க முன்வந்ததாக மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று நியாயம் வெற்றி பெற்ற நாள். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் இன்று நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தனர். இன்னும் ஒரு அணி எம்முடன் இணைந்துக்கொள்ள உள்ளது எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.